குஜராத் வெள்ள நிவாரணத்திற்கு ரூ.500 கோடி.. பிரதமர் மோடி அறிவிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: குஜராத்தில் வெள்ள நிவாரண பணிகளுக்காக ரூ. 500 கோடிக்கு மேல் நிதி உதவி அளிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

வட குஜராத்தில் பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பனஸ்காந்தா மற்றும் படன் மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாக உள்ளது.

 PM Modi announces Rs 500-cr relief fund to Gujarat

மக்களை மீட்பதற்காக ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Flood alert in Kashmir and Gujarat due to heavy rainfall

வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்று மாலை ஹெலிகாப்டரில் பிரதமர் மோடி, சேதங்களை பார்த்தார். பின்னர், குஜராத் மாநில வெள்ள பேரிடர் நிவாரண பணிகளுக்காக மத்திய அரசு சார்பில் ரூ.500 கோடிக்கு மேல் வழங்கப்படும் என்று அறிவித்தார் பிரதமர் மோடி. வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் எனவும் மோடி அறிவித்தார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Prime Minister Narendra Modi inspected on Tuesday the devastation in parts of Gujarat hit by floods and heavy rains, and announced a payout of Rs 2 lakh to family members of those killed.
Please Wait while comments are loading...