"நீண்ட காலம் நலமுடன் வாழ்க"..... ராகுல் காந்திக்கு மோடி பிறந்த நாள்வாழ்த்து

Subscribe to Oneindia Tamil

டெல்லி: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இன்று தனது 46-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ராகுல் காந்தி பிறந்த நாளையெட்டி, காங்கிரஸார் கோலாகலமாக கேக் வெட்டி கொண்டாடி வருகின்றனர்.

PM Modi wishes long, healthy life to Rahul Gandhi on his birthday

இதனிடையே பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டுள்ளதாவது:

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். அவர் நீண்ட காலம் நலமுடன் வாழ வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.

இந்த வாழ்த்துச் செய்தியை ஏற்றுக் கொண்டுள்ள ராகுல் காந்தி, அந்த ட்விட்டர் பதிவில் நன்றி தெரிவித்து பதிலளித்துள்ளார். அதில், நரேந்திர மோடியின் அன்புள்ள பிறந்தநாள் வாழ்த்துக்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

தனது பிறந்தநாளை வெளிநாடுகளில் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டிருந்த ராகுல் காந்தி, இந்த முறை தனது பிறந்தநாளை இந்தியாவில் கொண்டாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+