For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மோடி 66: தாயிடம் ஆசி பெற்ற பிரதமர் மோடி- கின்னஸ் சாதனை கொண்டாட்டங்கள் #HBDPradhanSewak

By Mayura Akilan
Google Oneindia Tamil News

காந்திநகர்: பிரதமர் நரேந்திரமோடி தமது 66வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு அவர் சொந்த ஊரில் தனது தாயாரிடம் ஆசி பெற்றார் அவரது பிறந்தநாள் கொண்டாட்டங்களில் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறுகின்றன.

சொந்த மாநிலமான குஜராத்தில் தமது 66வது பிறந்தநாளை கொண்டாட பிரதமர் மோடி காந்திநகர் வந்தார். அப்போது பாஜக தலைவர்கள், தொண்டர்கள் உட்பட ஏராளமானோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு குஜ்ராத் மாநிலம் நவ்சாரி என்ற இடத்தில் ஒரே நேரத்தில் 989 விளக்குகள் ஏற்றி கின்னஸ் உலக சாதனை படைக்கப்பட்டது.

தாயாரிடம் ஆசி

தாயாரிடம் ஆசி

ஆண்டுதோறும் பிறந்தநாளின் போது, தமது தாயாரிடம் ஆசீர்வாதம் வாங்குவதை மோடி வழக்கமாக கொண்டுள்ளார். எனவே அகமதாபாத் வீட்டில் வசிக்கும் சகோதரர் வீட்டில் உள்ள தாயார் ஹிர்பாவை நேரில் சந்தித்து மோடி ஆசிர்வாதம் பெற்றார்.

கின்னஸ் சாதனை

கின்னஸ் சாதனை

மோடியின் 66வது பிறந்தநாள் காரணமாக சூரத்தை மையமாகக் கொண்ட பிரபல கேக் பேக்கரி நிறுவனமான அடுல் பேக்கரி நிறுவனம் மோடிக்கு பிறந்தநாள் கேக்காக பிரமீட் வடிவத்தில் மிகப்பெரிய ஒன்று வடிவமைத்துள்ளது. அந்த கேக் கின்னஸ் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிட்டத்தட்ட 1.74மீட்டர் அல்லது (5'8.5") உயரம் இருக்கும் இந்த கேக்கை வடிவமைக்க அடுல் பேக்கரி நிறுவனத்தின் 20 பெண்கள் பணியாற்றியுள்ளனர்.

பிரமீடு வடிவ கேக்

பிரமீடு வடிவ கேக்

மோடியின் 66வது பிறந்தநாள் காரணமாக சூரத்தை மையமாகக் கொண்ட பிரபல கேக் பேக்கரி நிறுவனமான அடுல் பேக்கரி நிறுவனம் மோடிக்கு பிறந்தநாள் கேக்காக பிரமீட் வடிவத்தில் மிகப்பெரிய ஒன்று வடிவமைத்துள்ளது. அந்த கேக் கின்னஸ் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிட்டத்தட்ட 1.74மீட்டர் அல்லது (5'8.5") உயரம் இருக்கும் இந்த கேக்கை வடிவமைக்க அடுல் பேக்கரி நிறுவனத்தின் 20 பெண்கள் பணியாற்றியுள்ளனர்.

1000 கித்தார் பரிசு

1000 கித்தார் பரிசு

இந்நிகழ்ச்சியில், டெல்லியை மையமாகக் கொண்ட கித்தார், வயலின் வித்வான்கள் கலந்து கொண்டு மோடியின் பிறந்தநாள் இசையை வாசிக்கின்றனர். இவர்கள் தவிர நாடு முழுவதிலும் இருந்து 1000க்கும் மேற்பட்ட கித்தார் வித்வான்கள் கலந்து கொள்கின்றனர். மேலும், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு 100 கித்தார் பரிசாக வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நலத்திட்ட உதவி

நலத்திட்ட உதவி

இந்நிலையில் பிரதமரின் பிறந்தநாளை முன்னிட்டு குஜராத் அரசு சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குஜராத்தின் நவ்சாரி என்ற இடத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சியில் ரூ.7.5 கோடி அளவுக்கு மக்களுக்கு நிதியுதவி வழங்கப்பட உள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகள்

அப்போது 11 ஆயிரத்து 223 மாற்று திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்தனை நபர்களுக்கு உதவிகள் வழங்கும் செயல் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் ஆயிரம் பேருக்கு சக்கர நாற்காலிகளும், ஆயிரம் பேருக்கு காது கேட்கும் கருவிகளும் ஒரே நேரத்தில் வழங்கப்படுகிறது. இவையும் கின்னஸ் உலக சாதனையில் இடம் பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் பிறந்தநாளை #HBDPradhanSewak என்ற ஹேஸ்டேக் பதிவிட்டு பாஜக தொண்டர்கள் வாழ்த்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

English summary
Prime Minister Narendra Modi began his 66th birthday with a visit to his mother, Heeraben Modi in Gandhinagar. He was accorded a grand reception in Ahmedabad on Friday night as he landed at in Gujarat for his 66th birthday today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X