For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வதோதரா தொகுதியை ராஜினாமா செய்தார் பிரதமர் நரேந்திர மோடி

Google Oneindia Tamil News

டெல்லி: லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்ற வதோதரா தொகுதியை பிரதமர் மோடி இன்று ராஜினாமா செய்துள்ளார்.

பிரதமர் நரேந்திரமோடி லோக்சபா தேர்தலில் குஜராத் மாநிலம் வதோதரா, உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

PM Narendra Modi to retain the Varanasi seat, vacate the Vadodara seat

அவர் வதோதரா தொகுதியில் 5,70,128 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் மதுசூதனன் மிஸ்திரியையும், வாரணாசி தொகுதியில் 3,71,784 ஓட்டு வித்தியாசத்தில் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலையும் தோற்கடித்தார்.

2 தொகுதிகளில் வெற்றி பெற்ற நரேந்திரமோடி ஒரு தொகுதியில் எம்.பி பதவியில் இருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டது. உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜக அதிகமான இடங்களில் வெற்றி பெற்றது.

இதனால் வாரணாசி தொகுதியை தக்க வைத்துக் கொள்ள அவர் முடிவு செய்தார். தனது சொந்த மாநிலமான குஜராத்தில் உள்ள வதோதரா தொகுதியை விட்டு விலக நினைத்தார். அதன்படி மோடி இன்று வதோதரா எம்.பி பதவியை ராஜினாமா செய்தார்.மேலும், வாரணாசியை தக்க வைத்துக் கொண்டார்.

English summary
Prime Minister Narendra Modi who contested on the Varanasi seat as well as the Vadodara seat in the Lok Sabha elections has decided to retain the Varanasi seat and vacate the seat from his home state of Gujarat.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X