For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிரதமர் மோடியின் ஜப்பான் பயணம் ஒத்திவைப்பு – பட்ஜெட் கூட்டத்தொடர் காரணம்!

Google Oneindia Tamil News

டெல்லி: நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற உள்ள காரணத்தால் பிரதமர் நரேந்திர மோடியின் ஜப்பான் பயணம் தள்ளிவைக்கப் பட்டுள்ளது.

PM Narendra Modi won't visit Japan next month

இந்திய- ஜப்பான் இடையிலான நல்லுறவை வலுப்படுத்தும் வகையில் அடுத்த மாதம் ஜப்பான் செல்ல திட்டமிட்டுருந்தார் பிரதமர் நரேந்திர மோடி. இந்த சந்திப்பின் மூலம் இருதரப்பு உறவிற்கும் இடையில் பொருளாதார மற்றும் கலாச்சார ரீதியிலான தொடர்பிற்கு அடித்தளம் அமைக்கப்படும் என்று நம்பப்பட்டது.

இந்த நிலையில் பிரதமரின் தலைமையிலான 16 ஆவது மக்களவையின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடரானது வரும் ஜூலை 7 ஆம் தேதி தொடங்கி, ஜூலை 28 வரை நடைபெற உள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவையும் ஒப்புதலளித்துள்ளது.

அதனால், ஜப்பான் செல்லும் சுற்றுப்பயணத்தைவிட, பட்ஜெட் கூட்டத்தொடரானது மிகவும் முக்கியமான நிகழ்வு என்பதன் காரணமாக பிரதமர் தனது சுற்றுப் பயணத்தை ஒத்தி வைத்துள்ளார்.

பட்ஜெட் கூட்டத்தொடரின் போது நாட்டின் வளர்ச்சிக்கான பல்வேறு செயல்திட்டங்களை அமல்படுத்த உள்ளார் மோடி என்பது குறிப்பிடத்தக்கது. பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்தவுடன் எந்த நேரத்திலும் அவர் ஜப்பான் புறப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

English summary
Prime Minister Narendra Modi 's expected visit to Japan next month has been deferred till after the Budget session of Parliament ends in early August. The decision has been taken in view of the Budget Session which is very important for the newly formed government. The Cabinet meeting, chaired by Modi in New Delhi on Wednesday evening, decided to recommend the convening of the Budget session in the first week of July, sources said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X