For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தேசத்தின் பன்முக தன்மையை மதிக்க வேண்டும்.. ஆர்எஸ்எஸ் விழாவில் பிரணாப் முகர்ஜி பேச்சு

ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ஆண்டு விழாவில் முன்னாள் குடியரசுத்தலைவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டுள்ளார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

நாக்பூர்: ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ஆண்டு விழாவில் முன்னாள் குடியரசுத்தலைவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டுள்ளார். இதில் இந்தியாவின் பன்முகத்தன்மையை மதிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் தற்போது ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ஆண்டு விழா நடைபெற்றது. இதற்கு சிறப்பு விருந்தினராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் குடியரசுத்தலைவருமான பிரணாப் முகர்ஜிக்கு சென்றார்.

Pranab Mukherjee RSS Meet: Visits its founder KB Hedgewars birthplace in Nagpur

இவருக்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பே அழைப்பு விடுக்கப்பட்டது. அப்போதே இந்த அழைப்பு குறித்து பல சர்ச்சைகள் வந்தது. ஆனால் பிரணாப் செல்வாரா, மாட்டாரா என்று ரகசியம் காக்கப்பட்டது. கடைசியில் அவர் விழாவிற்கு செல்வதாக தெரிவித்தார். இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் நேற்று இரவு பிரணாப் விழாவில் கலந்து கொள்ள மஹாராஷ்டிரா வந்திருந்தார். தற்போது, அவர் ஆர்எஸ்எஸ் இயக்க செயல்பாட்டாளர்களுடன் உரையாடினார். அதன்பின் இன்று மாலை ஆர்எஸ்எஸ் இயக்கத் தலைவர் மோகன் பாகவதத்தை சந்தித்தார். அதன்பின் இருவரும் நாக்பூரில் ஆர்எஸ்எஸ் நிறுவனர் கே.பி.ஹெட்கேவார் பிறந்த இடத்தில் மரியாதை செலுத்தினார்கள். அதன் பின் நடந்த நிகழ்வில் பிரணாப் தலைமையேற்று பேசினார்.

அதில், நாட்டின் பன்முகத்தன்மையை நாம் கொண்டாட வேண்டும்.சிலரை மட்டும் தனிமைப்படுத்திவிட்டு பன்முகத்தன்மையை பார்க்க முடியாது.சகிப்புத்தன்மை இல்லாதது தேசியவாதத்தை சீர்குலைக்கும்.

நம் நாட்டில் இந்துக்கள், இஸ்லாமியர்கள், சீக்கியர்கள், கிருஸ்துவர்கள் சமமாக மதிக்கப்படவேண்டும். நேருவின் கனவு அதுதான். எல்லா மதத்தினருக்கும் சரியாக வாய்ப்பளிக்க வேண்டும். நேரு இதற்காக உழைத்தார்.

தேசியவாதமும், தேசபக்தியும் ஒன்றோடொன்று பின்னப்பட்டவை. எப்படிப்பட்ட பிரச்சனையாக இருந்தாலும் பேசி தீர்க்க வேண்டும். மத கலவரங்களை நிறுத்த வேண்டும் . இந்திய தேசிய மக்களை சிதைக்கு வகையில் தீவிரமாக இருக்காது என்று அண்ணல் காந்தி கூறியுள்ளார். நாம் அப்படித்தான் நடக்க வேண்டும் . மதங்களையும். மொழிகளையும் வைத்து மக்களை பிரிக்க கூடாது.

இந்தியா முழுக்க மக்கள் வேறு வேறு மொழிகள் பேசுகிறார்கள். பல மக்கள் பல மொழிகளை பேசுகிறார்கள். எல்லா மொழிகளையும் அரசு மதிக்க வேண்டும், என்று குறிப்பிட்டுள்ளார்.

English summary
Former President Pranab Mukherjee in conversation with Rashtriya Swayamsevak Sangh (RSS) chief Mohan Bhagwat at RSS founder KB Hedgewar's birthplace in Nagpur.,
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X