For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கர்ப்பிணியை துப்பாக்கியால் சுட்ட தீவிரவாதி.. பின்வயிற்றில் குண்டு பாய்ந்தும் குழந்தை பெற்ற அதிசயம்!

காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பெண் ஒருவருக்கு குழந்தை பிறந்து இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

காஷ்மீர்: காஷ்மீர் அருகே இருக்கும் சுஞ்வான் பகுதியில் நேற்று தீவிரவாத தாக்குதல் நடந்து இருக்கிறது. அதிகாலை தீவிரவாதிகள் உள்ளே புகுந்து இந்த தாக்குதலை நடத்தி இருக்கிறார்கள்.

இந்த தாக்குதல் நேற்று காலை ஆரம்பித்து நேற்று மதியம் வரை தீவிரமாக நடந்தது. அதன்பின் மீண்டும் இந்திய ராணுவம் திரும்பி தாக்கியது.

இதில் அங்கு இருந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு குண்டால் அடிபட்டு உள்ளது. இதில் அந்த பெண்ணுக்கு அதிசயமாக குழந்தை பிறந்துள்ளது.

மரணம்

மரணம்

இந்த தாக்குதல் நேற்று காலை ஆரம்பித்து நேற்று மதியம் வரை தீவிரமாக நடந்தது. அதன்பின் மீண்டும் இந்திய ராணுவம் திரும்பி தாக்கியது.இந்த தாக்குதலில் 3 தீவிரவாதிகள் மரணம் அடைந்தனர். இந்திய ராணுவ வீரர்கள் 5 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். இதில் காயமடைந்தவர்கள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

கர்ப்பிணி

கர்ப்பிணி

இதில் அங்கு நின்ற 35 வயது பெண்ணுக்கும் குண்டடி பட்டது. அந்த பெண் கர்ப்பிணி ஆவார். சரியாக அவர் பின் வயிற்றில் குண்டு பாய்ந்துள்ளது. உடனடியாக அந்த பெண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

குழந்தை

இந்த அதிர்ச்சியில் அந்த பெண்ணுக்கு பிரசவ வலி வந்துள்ளது. இதனால் டாக்டர்கள் முதலில் குழந்தை வெளியே எடுத்துள்ளார்கள். அந்த குழந்தைக்கு எந்த விதமான பாதிப்பு ஏற்படவில்லை. இந்த குழந்தை 2.5 கிலோ எடை இருந்துள்ளது.

தீவிர சிகிச்சை

தீவிர சிகிச்சை

அதற்கு அடுத்து அந்த பெண்ணிற்கு தீவிர சிகிச்சை நடந்துள்ளது. பின் வெற்றிகரமாக அந்த குண்டுகள் அகற்றப்பட்டுள்ளது. அந்த பெண்ணிற்கும் எந்த விதமான பாதிப்பும் இல்லை என்று தற்போது மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

English summary
Pakistan terrorists attacks again in Kashmir border. It fired in heart of JK. Due to this attack 5 army men killed, 4 Injured. In this attack a pregnant lady, gives delivery after got gun shot in the lower back in JK.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X