காமன்வெல்த்: தங்கம் வென்ற தமிழக வீரர் சதீஷ்குமாருக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து
காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீரர் சதீஷ்குமாருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டெல்லி: காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீரர் சதீஷ்குமாருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் 21வது காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஆண்களுக்கான 77 கிலோ பளுதூக்கும் போட்டியில் தமிழக வீரர் சதீஷ்குமார் தங்கம் வென்றார்.

தங்கம் வென்ற தமிழக வீரர் சதீஷ் சிவலிங்கத்திற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பளுதூக்கும் வீரர்கள் தொடர்ந்து 3வது நாளாக பெருமைப்படுத்தி உள்ளனர்.
ஆண்களுக்கான 77 கிலோ பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்ற சதீஷ் குமார் சிவலிங்கத்திற்கு எனது வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.
Weightlifters continue to make us proud on Day3 at #GC2018. Congratulations to Sathish Kumar Sivalingam for bagging the Gold in Men's 77Kg #PresidentKovind
— President of India (@rashtrapatibhvn) April 7, 2018
இதேபோல் தங்கப்பதக்கம் வென்ற சதீஷ்குமார் சிவலிங்கத்திற்கு துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வமும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் - பளுதூக்குதலில் 77 கிலோ எடைப்பிரிவில் நமது வேலூரைச் சேர்ந்த சதிஷ்குமார் சிவலிங்கம் தங்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். சதிஷ்குமார் மென்மேலும் சாதனைகள் புரிய எனது மனமார்ந்த வாழ்த்துகள். என தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலினும் சதீஷ்குமாருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். காமன்வெல்த் போட்டியில் பளுதூக்கும் பிரிவில் இரண்டாவது முறையாக தங்கம் வென்று தமிழ்நாட்டுக்கும், இந்திய நாட்டிற்கும் பெருமை தேடித்தந்துள்ள வீரர் சதீஷ்குமார் சிவலிங்கத்துக்கு வாழ்த்துகள். ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல வேண்டுமென்ற அவரது கனவு மெய்ப்பட அன்பான நல்வாழ்த்துகள். என தெரிவித்துள்ளார்.
-
ஆட்டம் போடும் அமெரிக்க டாலர்.. கோடிக்கணக்கான ரூபாய் தங்கத்தை விற்ற ரிசர்வ் வங்கி! இது தான் காரணமா? -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ராணிப்பேட்டை வீட்டில் 21 சவரன் தங்கம்.. 2 ஏக்கர் நிலப்பத்திரம்.. பீரோவை உடைக்காமலேயே ட்விஸ்ட் -
தங்கம்.. இந்திய மக்களின் ஆசையை குழி தோண்டி புதைத்த வரி.. 2 வாரத்தில் தலைகீழாக மாறியது! -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
தங்க திருட்டு வழக்கில் கைதான தம்பதியின் செயலால்... தாம்பரம் சேலையூர் போலீசாருக்கு பெரிய சிக்கல் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு












Click it and Unblock the Notifications