இசைஞானி இளையராஜாவுக்கு பிறந்தநாள்: போட்டோவுடன் டிவிட்டரில் தமிழில் வாழ்த்து சொன்ன குடியரசுத் தலைவர்!
இசைஞானி இளையராஜாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் டிவிட்டரில் பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார்.
டெல்லி: இசைஞானி இளையராஜாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் டிவிட்டரில் தமிழில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இசைஞானி இளையராஜா இன்று தனது 75வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதுவரை 1000க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார் இளையராஜா.
தமிழில் அன்னக்கிளி படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் இளையராஜா. சிறந்த இசையமைப்பாளருக்கான மத்திய மாநில அரசுகளின் விருதுகளை பலமுறை குவித்துள்ளார்.

பத்மவிபூஷ்ன் விருது
இந்த இசை மாமேதைக்கு பத்ம விருதுகளையும் வழங்கி அழகு பார்த்தது மத்திய அரசு. இந்த ஆண்டின் தொடக்கத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மத்திய அரசின் உயரிய விருதான பத்ம விபூஷன் விருதை வழங்கி இளையராஜாவை கவுரவித்தார்.

குடியரசுத் தலைவர் வாழ்த்து
இந்நிலையில் இன்று 75வது பிறந்த நாளை கொண்டாடும் அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இளையராஜாவுக்கு முழுக்க முழுக்க தமிழில் டிவிட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார் குடியரசுத தலைவர்.
|
ராம்நத் கோவிந்த் புகழாரம்
இந்தியாவின் இன்னிசைத் துடிப்பைத் தீர்மானிக்கும், ஒப்பற்ற கலைஞர் ,இசை மாமேதை, தன்னேரில்லா இளையராஜாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் . இவ்வாண்டுத் தொடக்கத்தில்,அன்னாருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கியதை யான் பெற்ற பெரும்பேறாகக் கருதுகிறேன். இவ்வாறு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இளையராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
|
இளையராஜாவின் போட்டோ
இதேபோல் ஆங்கிலத்திலும் தனது டிவிட்டர் பக்கத்தில் இசைஞானிக்கு பிறந்த நாள் வாழ்த்தை கூறியுள்ளார் குடியரசுத் தலைவர். மேலும் இளையராஜாவுக்கு பத்மவிபூஷன் விருது வழங்கியபோது எடுத்த போட்டோவையும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications