For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"பிகினி".. தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்திய பேராசிரியை.. டிஸ்மிஸ் செய்த கல்லூரி! போராடும் மாணவர்கள்

Google Oneindia Tamil News

கொல்கத்தா: கொல்கத்தாவில் பேராசிரியை ஒருவர் நீச்சல் உடையுடன் சமூக வலைத்தளத்தில் போட்டோ பதிவிட்டதற்காக அவரை பணிநீக்கம் செய்து பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது. எனினும் முன்னாள் மாணவர்கள் பேராசிரியைக்கு ஆதரவு தெரிவித்து பல்கலைக்கழக நிர்வகாகத்துக்கு எதிராக போராடி வருகின்றனர்.

மேற்கு வங்காள மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில் செயிண்ட் சேவியர் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. 2017 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த பல்கலைக்கழகம் தனியாருக்கு சொந்தமானது ஆகும்.

கொல்கத்தாவில் மிகவும் பிரபலமான பல்கலைக்கழகங்களில் ஒன்றாக விளங்கும் செயிண்ட் சேவியர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியை ஒருவர் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் நீச்சல் உடையுடன் போட்டா பதிவிட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

மகன் மாங்கல்யம் எடுத்து கொடுக்க... மறுமணம் செய்த பேராசிரியை.. அரிதிலும் அரிதான நெகிழ்ச்சி சம்பவம் மகன் மாங்கல்யம் எடுத்து கொடுக்க... மறுமணம் செய்த பேராசிரியை.. அரிதிலும் அரிதான நெகிழ்ச்சி சம்பவம்

 பேராசிரியை பணி நீக்கம்

பேராசிரியை பணி நீக்கம்

இது பல்கலைக்கழக நிர்வாகத்தின் கவனத்திற்கு வந்துள்ளது. இதையடுத்து, பேராசிரியரின் செயலைக் கண்டித்து அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் வகையில் பணி நீக்கம் செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பணி நீக்கம் செய்யப்பட்ட பேராசிரியையும், பல்கலைக்கழக துணைவேந்தர் தன்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா கடிதம் அளிக்க வைத்ததாகவும், இன்ஸ்டகிராம் பக்கத்தில் அநாகரிகமான, ஆட்சேபத்திற்குரிய புகைப்படத்தை பதிவிட்டதாகவும் தன் மீது பல்கலைக்கழகம் குற்றம் சுமத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

 முன்னாள் மாணவர்கள் ஆதரவு

முன்னாள் மாணவர்கள் ஆதரவு

மேலும் தனக்கு எதிரான பல்கலைக்கழகத்தின் நடவடிக்கையை கண்டித்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாகவும் பேராசிரியை தெரிவித்துள்ளார். இதனிடையே, சமூக வலைத்தள பக்கத்தில் நீச்சல் உடையுடன் போட்டோ பகிர்ந்ததற்காக பணி நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படும் பேராசிரியைக்கு ஆதரவாக பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள் களமிறங்கியுள்ளனர். இதற்காக change.org இணையத்தளத்தின் பெட்டிஷன் உருவாக்கப்பட்டு ஆதரவு பெறும் முயற்சியில் முன்னாள் மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

 தனிப்பட்ட விவகாரம்

தனிப்பட்ட விவகாரம்

பல்கலைக்கழக துணைவேந்தர் பெலிக்ஸ் ராஜ்-க்கு எதிராக உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தலைப்பில் பெட்டிஷன் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பெட்டிஷன் வெளியான சிறிது நேரத்தில் நுற்றுக்கணக்கானோர் ஆதரவு அளித்துள்ளனர். மேற்கு வங்க கல்வித்துறை மந்திரி பிரட்யா பாசு இந்த விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெட்டிஷனில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பேராசிரியை தனது தனிப்பட்ட இன்ஸ்டாகிரம் பக்கத்தில்தான் அந்த புகைப்படத்தை பதிவேற்றம் செய்தார். அது அவரது தனிப்பட்ட விவகாரம். அவரது தனிப்பட்ட இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டது பலகலைக்கழகத்தின் புகழுக்க்கு எந்த வகையிலும் இழுக்கு ஏற்படுத்தாது.

 துணைவேந்தரின் செயல் பிற்போக்குத்தனமானது

துணைவேந்தரின் செயல் பிற்போக்குத்தனமானது

பல்கலைக்கழகம் தொடர்பு படுத்தாமல் ஒவ்வொரு தனிநபரும் தங்கள் தனிப்பட்ட இடத்தில் சுதந்திரமாகத் தங்களின் எண்ணங்களை வெளிப்படுத்திக் கொள்ள உரிமை உண்டு. எந்தவொரு பல்கலைக்கழகமும் தங்கள் மாணவர்களிடம் புகுத்த வேண்டிய அடிப்படை கோட்பாடுகள் இவை"எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேராசிரியைக்கு அநீதி இழைத்திருப்பதாகவும் இவ்வாறு செய்வதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு ஆபத்தான முன்னுதாரணத்தை பல்கலைக்கழகம் ஏற்படுத்துவதாக கருதினால் இந்த பெட்டிஷனுக்கு ஆதரவாக கையெழுத்திடுமாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 பேராசிரியை குற்றச்சாட்டு

பேராசிரியை குற்றச்சாட்டு

பல்கலைக்கழக துணைவேந்தருக்கு எதிராக சமூக வலைத்தளங்களிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. துணைவேந்தரின் செயல் முற்றிலும் பிற்போக்குத்தனமானது எனவும் அவருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக வலைத்தளங்களில் கண்டனக்குரல்கள் வலுத்து வருகின்றன. இதே பல்கலைக்கழக்த்தில் பயின்று பேராசிரியாக பணிக்கு சேர்ந்த தனக்கு எதிராக எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை பாலியல் துன்புறுத்தலுக்கு நிகரானது எனவும், திட்டமிட்டு எனது கேரக்டரை இழிவுபடுத்தும் முயற்சி என்றும் கூறியுள்ளார்.

 சொந்த விருப்பத்தின் பேரிலேயே..

சொந்த விருப்பத்தின் பேரிலேயே..

மேலும், துணை வேந்தர் மற்றும் அவருடன் 6 பேர் கலந்து கொண்ட கூட்டத்தில், தான் நீச்சல் உடையுடன் இருந்த புகைப்படத்துன் கூடிய பேப்பர் பகிரப்பட்டதாகவும் அதில் எனக்கு எதிரான நடவடிக்கை வலியுறுத்தி கையொப்பம் போடப்பட்டு இருந்ததகாவும் பேராசிரியை குற்றம் சாட்டினார். எனினும், பேராசிரியையின் அனைத்து குற்றச்சாட்டுக்களையும் நிராகரித்துள்ள பல்கலைக்கழக நிர்வாகம், தனது சொந்த விருப்பத்தின் பேரிலேயே பேராசிரியை பதவியில் இருந்து விலகியதாக தெரிவித்துள்ளது.

English summary
A Kolkata university has taken action after firing a professor for posting a photo of her in a swimsuit on social media. However, former students have supported the professor and are fighting against the university administration.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X