For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முகமது நபி: நூபுர் ஷர்மாவின் கைதை வலியுறுத்தி போராட்டங்கள் - பல மாநிலங்களில் வன்முறை

By BBC News தமிழ்
|

முகமது நபி பற்றி ஆட்சேபனைக்குரிய கருத்துகளை வெளியிட்ட பாஜகவைச் சேர்ந்த இரு தலைவர்களை கைது செய்ய வலியுறுத்தி நாட்டின் பல்வேறு நகரங்களில் வெள்ளிக்கிழமை போராட்டங்கள் நடைபெற்றன. நூபுர் ஷர்மா, நவீன் ஜிண்டால் ஆகிய அந்த இரு முன்னாள் நிர்வாகிகளையும் கைது செய்ய வலியுறுத்தி நடந்த இந்த போராட்டங்களின்போது சில இடங்களில் வன்முறை வெடித்தது.

டெல்லி, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், தெலங்கானா, மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன.கடந்த மாதம் நூபுர் ஷர்மா தனியார் ஆங்கில தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதில் ஞானவாபி மசூதி தொடர்பான சர்ச்சை குறித்து விவாதிக்கப்பட்டது.

நூபுர் ஷர்மா பேசும்போது, ​​இந்த முழு சர்ச்சை எங்கிருந்து தொடங்கியது என்று குறிப்பிட்டு சில கருத்துக்களை வெளியிட்டார். அப்போது முகமது நபி குறித்து ஆட்சேபனைக்குரிய கருத்துகளை அவர் தெரிவித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இதேபோல, டெல்லி பாஜக செய்தி தொடர்பாளர் நவீன் குமார் ஜிண்டாலும் சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக ட்வீட் செய்த செயல்பாடு சர்ச்சையை தோற்றுவித்தது.

இதைத்தொடர்ந்து நூபுர் ஷர்மாவை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்து பாஜக மேலிடம் நடவடிக்கை எடுத்தது. நவீன் ஜிண்டாலை கட்சியில் இருந்தே பாஜக மேலிடம் நீக்கியதாக அறிவித்தது. ஆனால் இந்த நடவடிக்கையால் இஸ்லாமியர்கள் திருப்தியடையவில்லை. சம்பந்தப்பட்ட இருவர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் குரல் கொடுத்தனர்.

டெல்லியில் போராட்டம்

இதைத்தொடர்ந்து தலைநகர் டெல்லியில் உள்ள ஜாமா மசூதிக்கு வெளியே இஸ்லாமியர்கள் திரண்டனர். நூபுர், நவீன் ஜிண்டாலை கைது செய்ய வலியுறுத்தும் பதாகைகலை அவர்கள் வைத்திருந்தனர். சர்ச்சை கருத்துக்களை வெளியிட்ட இரு பாஜகவினரையும் கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் போராட்டத்தின்போது கோரிக்கை விடுத்தனர்.

இந்த ஆர்ப்பாட்டம் குறித்து ஜாமா மசூதியின் ஷாஹி இமாம் கூறுகையில், மஸ்ஜித் கமிட்டியால் எந்த ஆர்ப்பாட்டத்திற்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என்றார்.

மத்திய டெல்லி காவல் சரக துணை ஆணையர் ஸ்வேதா செளஹான், செய்தி நிறுவனமான ஏஎன்ஐயிடம் பேசும்போது, "ஜாமா மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகைக்காக சுமார் 1500 பேர் கூடியிருந்தனர். பிரார்த்தனை முடிந்ததும், 300 பேர் வெளியே வந்து நூபர் சர்மா ,நவீன் ஜிண்டால் ஆகியோரின் சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்," என்றார்.

https://twitter.com/ANI/status/1535188217921536000

உ.பி நகரங்களில் கல் வீச்சு மற்றும் தீ வைப்பு

Prophet Row: Curfew in ranchi after protests demanding nupur sharmas arrest turn violent

இதே நேரத்தில், உத்தர பிரதேசத்தில் லக்னெள, சாஹாரன்பூர், மொராதாபாத் ஆகிய இடங்களில் உள்ள மசூதிகளுக்கு வெளியே இஸ்லாமியர்கள் வீதிகளில் ஆயிரக்கணக்கில் இறங்கி போராட்டங்களில் ஈடுபட்டனர். சாஹாரன்பூரில், மக்கள் பச்சை வண்ண மத கொடிகள் மற்றும் இந்திய தேசிய மூவர்ணக் கொடியுடன் போராட்டப் பகுதிக்கு வந்தனர்.

லக்னெளவில் உள்ள மவுன்ட் வாலி மசூதி முன்பு திரண்ட முஸ்லிம்கள் நூபுர் ஷர்மா, நவீன் ஜிண்டால் கைதை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

உத்தர பிரதேசம் மாநிலம் சாஹாரன்பூரில் மசூதிக்கு வெளியே இஸ்லாமியர்கள் திரண்டு கோஷமிட்டனர்.

பிரயாக்ராஜில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது, ​​சில கடைகளுக்கு தீ வைக்கப்பட்டது. சில இடங்களில் காவல்துறையினர் மீதும் கற்கள் வீசப்பட்டன.இதையடுத்து போராட்டக்காரர்கலை நோக்கி காவல்துறையினரும் கற்களை வீசினர். இதைத்தொடர்ந்து வன்முறை தீவிரமாகாமல் தடுக்க போராட்டக்காரர்களை நோக்கி கண்ணீர் புகை குண்டுகளை போலீஸார் பயன்படுத்தினர்.

https://www.youtube.com/watch?v=bwZ4jz01uhE&t=8s

உத்தர பிரதேச மாநிலம் தியோபந்தில் இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டங்கலை நடத்த அனுமதி அளிக்கவில்லை. லக்னெளவில் உள்ள மவுன்ட் வாலி மசூதிக்கு வெளியே பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ட்ரோன்கள் மூலம் அங்குள்ள சூழலை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

முதல்வர் பிறப்பித்த உத்தரவு

இதற்கிடையில், பல நகரங்களில் நடந்த கல் வீச்சு சம்பவங்களை அடுத்து உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

https://twitter.com/ANINewsUP/status/1535210435263156225

இந்த நிலையில், டிஜிபி டி.கே.தாக்குர் , "முக்கிய மசூதி இருக்கும் இடத்தில் போதுமான ஏற்பாடுகளை செய்துள்ளோம், அங்கு ஏராளமானோர் வருகிறார்கள். மத தலைவர்கள், மௌலவி, மௌலானா போன்றவர்களிடம் தொடர்ந்து பேசி வருகிறோம். ஆத்திரமூட்டல் செயல்பாடுகளில் எவரும் ஈடுபட வேண்டாம். பதற்றமான பகுதியில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தியிருக்கிறோம். ஆளில்லா விமானங்கள் மூலம் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்," என்று கூறினார்.

இந்த போராட்டங்கள் குறித்து மாநில உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அவ்னிஷ் அவஸ்தி கூறுகையில், தேவையில்லாமல் அமைதியை சீர்குலைக்க முயன்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். உ.பி. மக்கள் நல்லிணக்கத்தைப் பேணுமாறு கேட்டுக்கொள்கிறேன். சிலர் பிரயாக்ராஜில் கலவரத்தை ஏற்படுத்த முயன்றனர். அவர்களை போலீசார் எச்சரிக்கையுடன் கலைத்தனர். இளைஞர்கள் தேவையில்லாமல் வீதிக்கு வரவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்," என்று தெரிவித்தார்.

பிற மாநிலங்களில் போராட்டம்

மேற்கு வங்கத்தின் கொல்கத்தா மற்றும் ஹெளராவிலும் பெரிய அளவில் போராட்டங்கள் நடந்தன. கொல்கத்தாவில் உள்ள பார்க் சர்க்கஸ் பகுதியில் இஸ்லாமியர்கள் பெருமளவில் கூடி முழக்கமிட்டனர். சில இடங்களில் போராட்டக்குழுவில் இருந்தவர்கள் வாகனங்களுக்கு தீ வைத்தனர்.

https://twitter.com/ANI/status/1535222856837017601

நூபுர் ஷர்மாவின் கருத்துக்கு எதிராக மகாராஷ்டிராவின் சோலாப்பூரில் ஏஐஎம்ஐஎம் கட்சியினர் கண்டன பேரணிக்கு அழைப்பு விடுத்திருந்தனர். இதையடுத்து அங்கு நடந்த போராட்டத்தில் முஸ்லிம்கள் திரளாக வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர். நவி மும்பையில், முஸ்லிம் பெண்கள் சர்ச்சை கருத்துக்களை வெளியிட்ட பாஜக பிரமுகர்களுக்கு எதிராக பேரணி நடத்தினர்.

https://twitter.com/ANI/status/1535213837779369986

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. நூபுர், நவீன் ஜிண்டாலுக்கு எதிராக போராட்டக்காரர்கள் முழக்கமிட்டனர்.

கர்நாடகா மாநிலம் கலபுர்கியில் ராசா அகாடமியினர் போராட்டம் நடத்தினர்.

https://twitter.com/ANI/status/1535222856837017601

இதுதவிர பஞ்சாபின் லூதியாணா, தெலங்கானாவில் ஹைதராபாத், சத்தீஸ்கரில் உள்ள ராஞ்சி ஆகிய இடங்களில் முஸ்லிம்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ராஞ்சியில் நடந்த கல் வீச்சு, கடைகள் அடைக்கப்பட்டன. கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தியதாகவும், இந்த சம்பவத்தில் போலீசார் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

https://twitter.com/ANI/status/1535223369364549632

ராஞ்சி சரக காவல்துறை துணைத் தலைவர் (டிஐஜி) அனிஷ் குப்தா கூறுகையில், "பதற்றமாக இருந்தாலும் நிலைமை தற்போதுவரை கட்டுக்குள் உள்ளது. இயன்ற அனைத்தையும் முயற்சித்து வருகிறோம். போராட்ட பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மூத்த அதிகாரிகளும் சம்பவ இடத்தில் உள்ளனர்," என்று தெரிவித்தார்.

https://www.youtube.com/watch?v=gact7lKTC-Q

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

BBC Tamil
English summary
Prophet Row: Curfew in ranchi after protests demanding nupur sharma's arrest turn violent
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X