பிரபல ஆர்.ஜே.வின் மனைவி திருமணமான 2 மாதத்தில் 10வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை
அகமதாபாத்: குஜராத்தில் பிரபலமான ரேடியோ ஜாக்கியின் மனைவி திருமணமான இரண்டே மாதத்தில் 10வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரைச் சேர்ந்தவர் குணால். பிரபலமான ரேடியோ ஜாக்கி(ஆர்.ஜே.). அவருக்கும் புமி தேசாய்(28) என்ற பெண்ணுக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 24ம் தேதி திருமணம் நடைபெற்றது. அண்மையில் அவர்கள் பாங்காக் சென்றுவிட்டு கடந்த 18ம் தேதி தான் அகமதாபாத் திரும்பி வந்துள்ளனர்.
இந்நிலையில் வியாழக்கிழமை மதியம் 2 மணிக்கு புமி மிதேஷ் சோனி என்பவருக்கு தான் சச்சின் டவர்ஸ் கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்யப் போவதாக எஸ்.எம்.எஸ். அனுப்பியுள்ளார். அதன் பிறகு மதியம் 2.30 மணிக்கு புமி சச்சின் டவர்ஸுக்கு சென்று 10வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பாங்காக் சென்ற இடத்தில் குணாலுக்கும், புமிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பாங்காக்கில் இருந்து ஊர் திரும்பிய பிறகு புமி கணவரை பிரிந்து தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து புமியின் உறவினர் ஒருவர் கூறுகையில்,
ஒரு போட்டியில் வெற்றி பெற்ற பிறகு குணாலுக்கும், புமிக்கும் இடையே அறிமுகம் ஏற்பட்டது. அதன் பிறகு அவர் குணாலை திருமணம் செய்ய முடிவு செய்தார். அவர்கள் தாய்லாந்து சென்றபோது அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இது குறித்து அவர் தனது தாயிடம் தெரிவித்துள்ளார். ஆனால் ஏன் தற்கொலை செய்தார் என்றே புரியவில்லை என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications