For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரபேல்: ராபர்ட் வதோராவிற்காக ராகுல் பேரம் பேசினார்.. பாஜக பரபரப்பு குற்றச்சாட்டு!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது உறவினர் ராபர்ட் வதோராவிற்கு ரபேல் ஒப்பந்தம் கிடைக்கும் வகையில் பேச்சுவார்த்தை நடத்தினார் என்று பாஜக குற்றச்சாட்டு வைத்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    ரபேல் ஒப்பந்தத்தில் காங்கிரசுக்கு ஏன் அக்கறை என பாஜக விளக்கம்

    டெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது உறவினர் ராபர்ட் வதோராவிற்கு ரபேல் ஒப்பந்தம் கிடைக்கும் வகையில் பேச்சுவார்த்தை நடத்தினார் என்று பாஜக குற்றச்சாட்டு வைத்துள்ளது.

    ரபேல் ஒப்பந்தம் மூலம் பாஜக ஊழல் செய்து இருக்கிறது என்று காங்கிரஸ் தரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளது. பிரான்ஸ் நாட்டில் இருந்து பாஜக அரசு வாங்கிய ரபேல் ரக விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்து இருப்பதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு இருக்கிறது.

    [ தேர்தல்: மத்தியபிரதேசம், மகாராஷ்டிராவில் மாயாவதியுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் கட்சிக்குள் அழுத்தம்! ]

    இதில் ரிலையன்ஸ் குழும தலைவர் அனில் அம்பானி பெயர் சிக்கி இருக்கிறது. இதில் 12 ஆயிரம் கோடி இழப்பும், பல ஆயிரம் கோடி ஊழலும் நடந்து இருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

    காங்கிரஸ் குற்றச்சாட்டு

    காங்கிரஸ் குற்றச்சாட்டு

    ரபேல் ஒப்பந்தத்தை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு அளிக்கும்படி பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார் என்று பிரான்சின் முன்னாள் அதிபர் ஹாலண்டே தெரிவித்து இருக்கிறார். அவரின் இந்த குற்றச்சாட்டு உலகம் முழுக்க வைரலாகி உள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ரபேல் விமான ஒப்பந்தத்தை அளிக்கும்படி டஸால்ட் நிறுவனத்தை (ரபேல் விமானத்தை அளிக்கும் நிறுவனம்) பிரதமர் மோடி வற்புறுத்தியதாக கூறியுள்ளது.

    பாஜக குற்றச்சாட்டு

    பாஜக குற்றச்சாட்டு

    இந்த நிலையில்தான் ராகுல் காந்தி தனது உறவினர் ராபர்ட் வதோராவிற்கு இந்த ரபேல் ஒப்பந்தம் கிடைக்க பேச்சுவார்த்தை நடத்தினார் (காங்கிரஸ் ஆட்சியில்) என்று பாஜக குற்றச்சாட்டு வைத்துள்ளது. அதாவது ராபர்ட் வதோராவின் நிறுவனத்திற்கு ரபேல் விமானங்களை தயாரிக்கும் ஒப்பந்தத்தை அளிக்க ராகுல் காந்தி முயற்சி செய்ததாக குற்றச்சாட்டு வைத்து இருக்கிறது.

    எப்படி

    எப்படி

    பாஜக அமைச்சர் கஜேந்திர சிங் இந்த குற்றச்சாட்டை வைத்து இருக்கிறார். சஞ்சய் பந்தாரி என்ற ஆயுத ஒப்பந்த டீலர் மூலம் காங்கிரஸ் டஸால்ட் நிறுவனத்திடம் இந்த ஒப்பந்தத்தை செய்ய இருந்துள்ளனர். இதற்காக இவர்கள் பிரான்ஸ் சென்று இருக்கிறார்கள் என்று கஜேந்திர சிங் குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார்.

    காங்கிரஸ் மறுப்பு

    காங்கிரஸ் மறுப்பு

    ஆனால், ஏன் சஞ்சய் பந்தாரி பாஜக ஆட்சியில் மோடியுடன் ரபேல் ஒப்பந்தம் செய்ய பிரான்ஸ் சென்றார் என்று இவர் விளக்கமளிக்கவில்லை. பிரான்ஸுடன் மோடி ஒப்பந்தம் செய்த போது அங்கு சஞ்சய் பந்தாரியும் இருந்தார் என்று கூறப்படுகிறது. இதற்கு அவர் விளக்கமளிக்கவில்லை. இந்த நிலையில் காங்கிரசும் இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து இருக்கிறது.

    English summary
    Rafale Deal: BJP brings in Robert Vadra into the scene to oppose Congress.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X