For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெங்களூரில் திடீர் கோடை மழை.. வெப்பத்தில் வெந்துபோன மக்கள் குதுகலம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

பெங்களூர்: கடுமையான வெப்பம் வாட்டி வந்த பெங்களூரில் இன்று இன்ப அதிர்ச்சியாக சில பகுதிகளில் மழை பெய்துள்ளது.

பெங்களூரில் நேற்று அதிகபட்ச வெப்ப நிலை 39.2 டிகிரி செல்சியஸ் என பதிவாகியது. இதற்கு முன்பு 1931ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 38.3 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியிருந்ததே இதுவரை நகரில் பதிவான உச்சபட்ச வெப்ப நிலையாக இருந்துவந்தது. அந்த சாதனை நேற்று தகர்க்கப்பட்டது.

10 வருடங்களுக்கு முன்பு, ஃபேன் தேவைப்படாத நகரம் என்ற பெருமைகொண்ட பெங்களூர் நகர மக்கள், இப்போது ஏசி பொருத்தி வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இந்த நிலையில், இன்று மதியம் 4 மணியளவில் தெற்கு பெங்களூரின் எலக்ட்ரானிக் சிட்டி, மத்திய பெங்களூரின் எம்.ஜி.ரோடு, ஜெயநகர் அருகேயுள்ள வி.வி.புரம் பகுதிகளில் திடீர் மழை பெய்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். மழையின்போது காற்றும் வேகமாக வீசியது.

குறுகிய காலமே நீடித்த மழை என்றபோதிலும், வெப்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அது மகிழ்வை தந்தது. நகரின் பிற பகுதிகளிலும் மழை பெய்யும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பெங்களூரிலுள்ள நடிகை பூனம் பாண்டேவும் தனது டிவிட்டர் பக்கத்தில் மழை புகைப்படத்தை பதிவு செய்து மகிழ்ச்சி வெளிப்படுத்தியுள்ளார்.

English summary
At last Rain in Bengaluru Brief spell, but much relief.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X