For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேர்தல் முடிந்த பிறகு வாத்ரா நில பேரம் குறித்து ராஜஸ்தான் அரசு விசாரிக்கும்: பாஜக

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: லோக்சபா தேர்தல் முடிந்த பிறகு ராஜஸ்தானில் ராபர்ட் வாத்ராவின் நிலபேர விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று பாஜக தெரிவித்துள்ளது.

லோக்சபா தேர்தல் முடிந்த பிறகு வசுந்தரா ராஜி முதல்வராக இருக்கும் ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வாத்ரா செய்த நில பேர ஊழல் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று பாஜக அறிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் சோனியா காந்தியும், காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியும் அமைதியாக இருப்பது நிச்சயம் ஏதோ உள்ளது என்பதையே உணர்த்துகிறது என்று பாஜக செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாரமன் தெரிவித்துள்ளார்.

நில பேர ஊழல் குறித்து காங்கிரஸ் விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும் இல்லை என்றால் வாத்ராவுக்கு எதிராத ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறுவதாக அவதூறு வழக்கை சோனியா தொடர வேண்டும் என்று பாஜக தலைவர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா கூறுகையில்,

பிரியங்கா காந்தி காரசாரமாக பிரச்சாரம் செய்வதை பார்த்து பாஜக பயந்துவிட்டது. ரேபரேலி மற்றும் அமேதியில் பிரியங்கா காந்தியின் பிரச்சாரத்தை பார்த்து பாஜகவுக்கு பயம் வந்துவிட்டது என்றார்.

English summary
BJP announced that Rajasthan government would probe Vadra's land deals in the state after the lok sabha polls.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X