அயோத்தியில் மசூதி அல்ல ராமர் கோவில் கட்டப்படும்: பாஜக அமைச்சர் அஹிர்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: அயோத்தியில் ராமர் கோவில் தான் கட்டப்படுமே தவிர மசூதி அல்ல என்று ரசாயணம் மற்றும் உரத்துறை இணையமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹிர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

ராமர் கோவில் விவகாரம் பற்றி பாஜக அரசு இதுவரை பேசாமல் உள்ளது. இது எங்களின் கௌரவப் பிரச்சனை. ராமர் கோவில் விவகாரம் குறித்து சாதுக்களும், மகான்களும் செயல்பட்டுக் கொண்டுள்ளனர். இந்துக்களும், முஸ்லீம்களும் அரசை சந்தித்து பேசி வருகிறார்கள். அயோத்தியில் எப்பொழுது கட்டிடம் கட்டினாலும் அது கோவில் தானே தவிர மசூதி இல்லை. ராமர் கோவிலை பிற வழிகளில் கட்டுவோம்.

Ram Temple will be built through other means: Hansraj Gangaram Ahir

விவசாயிகள் மற்றும் வேலையில்லாதவர்களின் நலனுக்காக சப்கா சாத், சப்கா விகாஸ் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் பதவியேற்றுள்ள அரசுக்கு எந்தவித ஆபத்தும் இல்லை. அந்த அரசு தனது பதவிக்காலத்தை நிறைவு செய்யும்.

நிலம் கையகப்படுத்தும் சட்டம் விவசாயிகளின் நலனுக்காகவே கொண்டு வரப்படுகிறது. அவர்களிடம் தான் வாக்கு கேட்டு செல்ல வேண்டும். அப்படி இருக்கையில் அவர்களுக்கு தீங்கு செய்வோமா என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+