For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"எலிக்கூட்டம்".. மூலவர் சிலைகளுக்கு "ஆபத்து".. கருவறைக்குள்ளேயே புகுந்துடுச்சே.. எங்கேன்னு பாருங்க

பூரி கோயிலுக்குள் ஏற்பட்ட எலிகள் தொல்லையால் பூசர்கள் புகார்களை சொல்லி வருகிறார்கள்

Google Oneindia Tamil News

புவனேஸ்வர்: கடவுளர்களின் சிலையில் உள்ள முகத்தை, எலிகள் நாசம் செய்வதால், மூலவர் சிலைகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று கோயில் பூசகர்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.

ராஜஸ்தானில் உள்ள எலி கோயில் பிரசித்தி பெற்றது.. கர்ணி மாதா கோவில் செல்லமாக எலி கோவில் என்று அழைக்கப்படுகிறது. இந்த கோவிலில் கிட்டத்தாட்ட 20,000 எலிகள் இருக்கலாம் என்கிறார்கள்.

ராஜஸ்தானின் தேஸ்நோக் என்ற பகுதியில் இந்த கர்ணி மாதா எலிக் கோயில் அமைந்துள்ளது. இங்குள்ள எலிகள் உண்பதற்கான உணவு மற்றும் பால் இங்கு வைக்கப்பட்டுள்ளன.

அதிர்ச்சி! சட்டென ஓடி வந்து மர்ம நபர் செய்த காரியம்.. அப்படியே ஸ்டன் ஆன ராகுல் காந்தி! என்ன நடந்தது?அதிர்ச்சி! சட்டென ஓடி வந்து மர்ம நபர் செய்த காரியம்.. அப்படியே ஸ்டன் ஆன ராகுல் காந்தி! என்ன நடந்தது?

பால் பிரசாதம்

பால் பிரசாதம்

இதில் எலி குடித்த பால் தான் இங்கு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகின்றன. இங்குள்ள எலிகள் நம்மீது ஏறினால் அதிர்ஷ்டம் என நம்பப்படுகிறது. அதே போல் வெள்ளை எலியை பார்த்தால் மிகுந்த அதிர்ஷ்டசாலியாக பார்க்கப்படுகிறது... இங்குள்ள எலிகள் கடவுளின் அம்சமாக பார்க்கப்படுவதால் யாரேனும் எலியை கொன்றுவிட்டால் அதற்கு பிராச்சியத்தமாக தங்கத்தினால் ஆன எலியை கோயிலுக்கு வழங்குகிறார்கள்.. இந்த பழக்கம் பல ஆண்டுகளாக பின்பற்றி வருகின்றது.. இப்படி எலிகளுக்கான முக்கியத்துவம் தரும் வகையில் இந்த கோயில் அமைந்து வருகிறது..

அலங்கோலம்

அலங்கோலம்

ஆனால், ஒடிசா மாநிலத்தில் உள்ள கோயிலில், எலிகளே பெரும் தொல்லைகளாகிப்போன சம்பவம் தற்போது நடந்துள்ளது. ஒடிசா மாநிலத்தில் உள்ளது பூரி ஜகந்நாகர் கோயில்.. இது உலக புகழ்பெற்ற திருத்தலங்களில் ஒன்றாகும்.. இங்குள்ள ஜகந்நாதர், பாலபத்ரர், சுபத்திரை ஆகியோரின் தரிசனத்துக்காக நாட்டில் பல மாநிலங்களிலிருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்களும் சுற்றுலாப் பயணிகளும் வருகிறார்கள்... இந்தக் கோயிலில்தான், கூட்டம் கூட்டமாக எலிகள் சுற்றி திரிந்து கொண்டிருக்கின்றன.. இந்த எலிகள், கோயில் கருவறைகளுக்குள்ளேயே புகுந்து நாசம் செய்வதாக புகார்களை பூசாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

கருவறைகள்

கருவறைகள்

இந்த எலிகள் கூட்டமாக கருவறைக்குள் நுழைந்து, கடவுளர்களுக்கு அணிவிக்கும் மாலை, அணிகலன் உள்ளிட்டவற்றை கொறித்து விடுகின்றனவாம்.. அதேபோல, பூஜை செய்யும் கருவறைக்குள் எலிக்கூட்டம் ஓடிக்கொண்டேயிருப்பதால், பூஜைகளை சரிவரச் செய்யமுடியாமல் இடையூறாக இருப்பதாகவும் சொல்கிறார்கள்.. கருவறை மூலைகளில் உள்ள பொந்துகளில் இவைகள் குடியிருப்பதால், கருவறைக்குள் அசிங்கம் செய்துவிடுவதாகவும், அந்த கழிவுகளுக்கு நடுவில் நின்று பூசை செய்யவேண்டியதாக இருப்பதாகவும், சத்திய நாராயணன் புஷ்பலக் என்ற பூசகர் வேதனையோடு சொல்கிறார்.

விஷம் எலி

விஷம் எலி

கடந்த 2020, 2021ம் வருடத்தில் கொரோனா தொற்று உச்சத்தில் இருந்தபோது, அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டதுபோல், இந்த கோயிலும் மூடப்பட்டது.. அதனால் பக்தர்கள் யாரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை.. அந்த நேரத்தில், இந்த எலிகளை எல்லாம் பொறி வைத்து பிடித்தனர்.. அதேபோல கரப்பான் பூச்சிகளையும் ஏராளமாய் பிடித்தனர்.. எலித்தொல்லையில் இருந்து ஓரளவுவிடுபட்ட நிலையில், இப்போது மறுபடியும் அட்டகாசங்கள் பெருகிவிட்டதாக சொல்கிறார்கள்..

எலிப்பொறிகள்

எலிப்பொறிகள்

அதாவது, கர்ப்பக்கிரகத்தில் உள்ள ஜெகந்நாதர், பாலபத்திரர், சுபத்திரை சிலைகள் மரத்தால் ஆனவையாம்.. கோயிலுக்கு கூட்டம் கூட்டமாக வரும் எலிகள், சுவாமி சிலைகளுக்கு உடுத்தும் ஆடைகளையும், பூமாலைகளையும் கடித்து நாசம் செய்வதுடன், கடவுளர்களின் சிலையில் உள்ள முகத்தையும் அவை நாசம் செய்கின்றன. இதனால் மூலவர் சிலைகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கூறுகிறார்கள்.. இப்போதும் எலி பொறிகள் வைத்திருக்கிறார்களாம்.. சிக்கும் எலிகளை மட்டும் வெளியே நீண்டதூரம் கொண்டுபோய் விட்டுவிருகிறார்கள்.. ஆனால், எலி மருந்து வைத்து அவற்றை கொல்ல முயற்சி எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்கிறார்கள்.

English summary
Rat Menace Hits Puri's 12th Century Jagannath Temple, Odisha
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X