ஆதார் எண் இணைப்பு.. நெருக்கும் வங்கிகள்.. ஆனால் ரிசர்வ் வங்கி என்ன சொல்லுது பாருங்க!

வங்கிகள் தொடர்ந்து ஆதார் எண்ணை இணைக்க வலியிறுத்தினாலும், இத்தகைய அறிவிப்பை தாங்கள் வெளியிடவில்லை என்று ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

மும்பை : வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது கட்டாயம் என்பது ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு இல்லை என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெரிய வந்துள்ளது.

மத்திய அரசின் நலத்திட்ட தவிகள் மற்றும் மானியங்களைப்பெற கேஸ் இணைப்பு, ரேஷன் அட்டை ள்ளிட்டவற்றில் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதே போன்று வங்கிக் கணக்குடனும் ஆதார் எண்ணை இணைக்க டிசம்பர் 31 வரை காலக்கெடு அளிக்கப்பட்டுள்ளது.

RBI says its not made Aadhaar link with bank account mandatory

இந்த காலகட்டத்திற்குள் ஆதார் எண்ணை இணைக்காதவர்களின் வங்கிக் கணக்குள் முடக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் தங்களது ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைத்து வருகின்றனர்.

இந்நிலையில் மணிலைஃப்.இன் என்ற இணையதளம் சார்பில் ரிசர்வ் வங்கியிடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதற்கு ரிசர்வ் வங்கி அளித்துள்ள பதிலில், இது வரை வங்கிகளுக்கு அப்படி எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்று கூறி உள்ளது.

கடந்த ஜூன் 1-ந்தேதி மத்திய அரசு வெளியிட்ட அரசாணையில் சட்டவிரோத பண பரிமாற்றத்தை தடுப்பதற்காக வங்கிக் கணக்கு வைத்துள்ளவர்கள், ஆதார் எண் மற்றும் பான் எண்ணை இணைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்ததையம் ரிசர்வ் வங்கி சுட்டிக்காட்டி உள்ளது.

மத்திய அரசு 50 திட்டங்களுக்கான சலுகைகளைப் பெற ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று கூறி இருந்தது. ஆனால் உச்சநீதிமன்றம் 6 திட்டங்களுக்கு மட்டுமே ஆதார் எண்ணை காட்டாயமாக்கலாம் என்று கூறி உள்ளது. எனினும் அனைத்து திட்டங்களுக்கும் ஆதாரை மத்திய அரசு கட்டாயமாக்குவதை எதிர்த்து தொடரப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அடுத்த மாதம் தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+