இனி நீங்கள் நினைத்த நேரத்தில் பிரதமர் மோடியை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்!!!
டெல்லி: பிரதமர் அலுவலக இணையதளம் புதுப்பிக்கப்பட்டு புதுப் பொலிவுடன் திகழ்கிறது. அதில் பிரதமருக்கு நேரடியாக கடிதம் எழுதும் வசதி உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் மோடி அடிக்கடி வெளிநாடு செல்வது பற்றி தான் பலரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். இந்த சூழலில் பிரமதர் அலுவலக இணையதளத்தை புதுப்பித்துள்ளனர்.

புதுப் பொலிவுடன் உள்ள அந்த இணையதளத்தில் உள்ள ஒரு அம்சம் தான் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அது என்னவென்றால் இனி மக்கள் நினைத்தால் பிரதமர் மோடிக்கு நேரடியாக கடிதம் எழுதுவது தான்.
இணையதளத்தில் உள்ள write to pm என்ற லிங்க்கை கிளிக் செய்து மோடிக்கு கடிதம் எழுதலாம். இல்லை உங்களின் ஐடியாக்களையும் மோடியுடன் பகிர்ந்து கொள்ள அந்த இணையதளத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது.
The PMO's website has a new look. Do visit… http://t.co/EK54Q0pDq8
— Narendra Modi (@narendramodi) May 27, 2015 இது குறித்து மோடி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
பிரதமர் அலுவலக இணையதளம் புதுப்பொலிவு பெற்றுள்ளது...pmindia.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று பார்க்கவும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications