For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வங்கிகளில் குவிந்த செல்லாத நோட்டுகள் சுமார் ரூ. 5 லட்சத்து 44 ஆயிரம் கோடி?

கடந்த 9 நாட்களில் வங்கிகளில் குவிந்த செல்லாத நோட்டுக்களின் விவரம் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி 5 லட்சத்து 44 ஆயிரத்து 571 கோடி ரூபாய் மதிப்பிலான நோட்டுகள் வங்கிகளில் குவிந்திருப்பதாக தகவல் வெளியா

Google Oneindia Tamil News

மும்பை: கடந்த 9 நாட்களில் செல்லாது என அறிவிக்கப்பட்ட 500,1000 ரூபாய் நோட்டுகள் சுமார் 5 லட்சத்து 44 ஆயிரத்து 571 கோடி ரூபாய் மதிப்பில் வங்கிகளில் டெப்பாசிட் செய்யப்பட்டிருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

பழைய ரூபாய் நோட்டுகள் கடந்த 8 ம் தேதி நள்ளிரவு முதல் செல்லாது என மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. இந்த அறிவிப்பினால் நாடு முழுவதும் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.

 பொதுமக்களின் இன்னல்கள்

பொதுமக்களின் இன்னல்கள்

நாள்தோறும் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 9 நாட்களில் செல்லாது என அறிவிக்கப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகள் எவ்வளவு வங்கியில் டெப்பாசிட் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்த விபரத்தை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

 9 நாட்களில்ரூ 5 லட்சத்து 44 ஆயிரத்து 571 கோடி

9 நாட்களில்ரூ 5 லட்சத்து 44 ஆயிரத்து 571 கோடி

அதாவது, 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட 9 நாட்களில் 5 லட்சத்து 44 ஆயிரத்து 571 கோடி ரூபாய் மதிப்பிலான பழைய நோட்டுகள் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

 ரூ. 33 ஆயிரத்து 6 கோடி புதிய பணம்

ரூ. 33 ஆயிரத்து 6 கோடி புதிய பணம்

இதில், 33 ஆயிரத்து 6 கோடி ரூபாய் புதிய பணம் மாற்றிக் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.5 லட்சத்து 11 ஆயிரத்து 565 கோடி வங்கி கணக்குகளில் டெபாசிட்டாக பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

அதன்பிறகு கடந்த 10-ஆம் தேதியில் இருந்து வங்கிகளில் செல்லாத நோட்டுகளை மாற்றிக் கொள்ளவும், அவற்றை வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யவும் அனுமதிக்கப்பட்டது.

 ரூ 1 லட்சத்து 3 ஆயிரத்து 316 கோடி

ரூ 1 லட்சத்து 3 ஆயிரத்து 316 கோடி

வங்கி கவுண்டர்களிலும், ஏடிஎம் இயந்திரங்கள் மூலமும் 1 லட்சத்து 3 ஆயிரத்து 316 கோடி ரூபாய் பணத்தை மக்கள் எடுத்திருப்பதாக ரிசர்வ் வங்கி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

English summary
How much amount of demonetized notes dumpped in Banks, reserve bank of india given details in a statement here.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X