For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

91 ஆண்டு பாரம்பரியம்.. டிரவுசரை தூக்கிப் போட்டு பேன்ட்டைக் கையில் எடுக்கும் ஆர்.எஸ்.எஸ்.!

By Karthikeyan
Google Oneindia Tamil News

மும்பை: ஆர்எஸ்எஸ் அமைப்பில் காக்கி டவுசர் ஓர் அங்கமாக கடந்த 91 ஆண்டுகளாக இருந்து வந்தது. தற்போது அந்த காக்கி டவுசருக்கு பதில் பிரவுன் பேண்ட் அணிய போகிறார்களாம்.

சமீபத்தில் நாக்பூரில் நடந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் உயர்மட்டக் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில், பாரம்பரிய புதிய சீருடை விற்பனைக்கு வந்தது. முதல் கட்டமாக 7 லட்சம் ஆடைகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

RSS Starts Sale of New Uniform at Rs 250 a Piece

இதனை தொடர்ந்து தொண்டர்கள் ஆர்வத்துடன் வந்து தங்களுக்கு ஏற்ற புதிய சீருடைகளைப் பெற்றுச் செல்கின்றனர். வரும் விஜயதசமி முதல் ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர் வழக்கமான காக்கி டிரவுசருக்கு பதிலாக, பிரவுன் பேன்ட் அணியவுள்ளனர்.

இது குறித்து ஆர்எஸ்எஸ் உறுப்பினரும், சிந்தனையாளருமான திலீப் தியோதர் கூறுகையில், "இந்தச் சீருடையில் இருந்து யாருக்கும் விலக்கில்லை. ஆர்எஸ்எஸ் தலைவரும்கூட இச்சீருடையை அணிய வேண்டும்" என்றார்.

பேண்ட் விலை ரூ.250:

மாற்றியமைக்கப்பட்ட புதிய பேண்ட் ஒன்றின் விலை ரூ.250 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுதவிர தேவைப்படுவோர் மேல்சட்டை, பெல்ட், கருப்புத் தொப்பி, கருப்பு ஷூ ஆகியனவற்றை தனித்தனியாக அவற்றிற்கான விலையைக் கொடுத்து பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடைசியாக 2010ல்

கடைசியாக சீருடையி்ல 2010ம் ஆண்டு மாற்றம் செய்திருந்தது ஆர்.எஸ்.எஸ். அப்போது லெதர் பெல்ட்டுக்குப் பதில் கேன்வாஸ் பெல்ட் அப்போது அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் பலர் இன்னும் பழைய மாதிரி லெதர் பெல்ட்தான் போடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரம்ப காலத்தில்

1925ம் ஆண்டு ஆர்எஸ்எஸ் தோற்றுவிக்கப்பட்டது. 1939ம் ஆண்டு வரை சட்டை, டிரவுசர ஆகிய இரண்டுமே காக்கியாக இருந்தது. 1940ல் வெள்ளைச் சட்டை வந்தது. 1973ல் நீண்ட பூட்டுகளுக்குப் பதில் லெதர் ஷூ அறிமுகமானது. பிறகு ரெக்ஸின் ஷூக்களும் அனுமதிக்கப்பட்டன.

English summary
The sale of the new dress has already been launched with each piece costing Rs 250. According to sources, around 7 lakh trousers are to be provided in first phase to the members of RSS
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X