For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அடுத்தடுத்து குவியும் புகார்கள்... வெளிநாடு சென்றுவிட்டார் சசிகலா புஷ்பா?

By Karthikeyan
Google Oneindia Tamil News

டெல்லி: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா எம்.பி. வெளிநாடு சென்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

டெல்லி விமான நிலையத்தில் திமுக எம்பி திருச்சி சிவாவை அடித்து சர்ச்சையில் சிக்கிய சசிகலா புஷ்பா, அடுத்த அதிரடியாக முதல்வர் ஜெயலலிதா தம்மை அடித்ததாக ராஜ்யசபாவில் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் சசிகலா புஷ்பா எம்.பி. இதனால் அவர் அதிமுகவில் இருந்து உடனடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.

Sasikala Pushpa left from delhi?

இதனிடையே ராஜ்யசபாவில் பேசிய சசிகலா புஷ்பா, நான் எம்பி பதவியை ராஜினாமா செய்யவே மாட்டேன் என திட்டவட்டமாக கூறியிருந்தார்.

முதல்வர் ஜெயலலிதாவால் அதிமுகவில் ஏறுமுகம் கண்ட சசிகலா புஷ்பா. யாருமே செய்யத் துணியாத செயலாக ஜெயலலிதாவை பகிரங்கமாக எதிர்த்திருக்கிறார். தமிழகத்தை பொறுத்த வரை தொண்டர்கள் அதிகம் கொண்ட வலுவான கட்சி அதிமுக. அதன் தலைவியை சசிகலா புஷ்பா எதிர்த்துள்ளது நாடு முழுவதும் ஆச்சரிய அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே சசிகலா புஷ்பா மீது மோசடி உட்பட பல புகார்கள் அடுத்தடுத்து எழுந்தன. இதில் அவரது வீட்டில் வேலைபார்த்த நெல்லை திசையன்விளையை சேர்ந்த பானுமதி என்பவர் தனது சகோதரி ஜான்சிராணியுடன் சேர்ந்து வந்து தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்தில் புகார் செய்தார். அதில் சசிகலா புஷ்பாவின் கணவர் மற்றும் மகன் ஆகியோர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறியிருந்தார்.

இந்த நிலையில் பொய்ப்புகார்களை எதிர்கொள்ள தயார் எனவும், நான் நினைத்தால் தமிழக அரசியலை புரட்டி போடும் செயலில் ஈடுபடுவேன் என்றும் பேட்டி அளித்தார் சசிகலா புஷ்பா. அதோடு முன்ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். வரும் 22 ஆம் தேதி வரை சசிகலா புஷ்பாவை கைது செய்யக்கூடாது என்று கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் அவருக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள டெல்லி போலீசார், சசிகலா புஷ்பா அவரது வீட்டில் இல்லை என்றும், அவர் எங்கு சென்றார் என்றும் தெரியவில்லை என டெல்லி காவல்துறை மூலம் உள்துறை அமைச்சகத்துக்கு தகவல் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து சசிகலா புஷ்பா வெளிநாடு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

English summary
sacked ADMK MP Sasikala Pushpa left from delhi? sources say that
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X