For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கேள்வி மேல் கேள்வி கேட்டு ஆசிரியர்களை ஓட வைத்த சத்யா நாதெல்லா

By Siva
Google Oneindia Tamil News

மங்களூர்: மைக்ரோசாப்ட் சிஇஓவான சத்யா நாதெல்லா படிக்கும் காலத்தில் ஆசிரியர்களிடம் கேள்வி மேல் கேள்வி கேட்பாராம்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய சிஇஓவான சத்யா நாதெல்லா ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர். அவர் ஹைதராபாத் பப்ளிக் ஸ்கூலில் படித்துவிட்டு மணிபால் பல்கலைக்கழகத்தில் பி.இ. படித்தார்.

பள்ளி, கல்லூரி காலங்களில் நாதெல்லாவை பார்த்தால் ஆசிரியர்கள் என்ன நினைத்தார்கள் தெரியுமா?

கேள்விகள்

கேள்விகள்

நாதெல்லா பள்ளி காலம் முதல் வகுப்பறையில் ஆசிரியர்களிடம் கேள்வி மேல் கேள்வி கேட்பாராம். பிற மாணவர்கள் அமைதியாக இருக்கையில் அவர் மட்டும் கேள்விகள் கேட்டுக் கொண்டே இருப்பாராம்.

பொறுமையை சோதிப்பு

பொறுமையை சோதிப்பு

நாதெல்லா கேள்வி கேட்டுக் கொண்டே இருப்பதால் சில நேரம் என் பொறுமையை சோதிப்பார். அவர் ஒரு சிறந்த மாணவர் என்று மணிபால் பல்கலைக்கழகத்தில் நாதெல்லாவுக்கு டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் பாடம் எடுத்த பேராசிரியர் ஹரிஸ்சந்திரா ஹெப்பார் தெரிவித்தார்.

பள்ளி விழா

பள்ளி விழா

ஹைதராபாத் பப்ளிக் ஸ்கூலின் 90வது ஆண்டு விழா கடந்த ஆண்டு நடைபெற்றது. இந்த விழாவில் நாதெல்லா கலந்து கொண்டு தான் பள்ளிக்காலத்தில் கிரிக்கெட் விளையாடியது பற்றி பேசினார் என்று அவரது நண்பர்கள் தெரிவித்தனர்.

பள்ளி தோழர்கள்

பள்ளி தோழர்கள்

நாதெல்லா அமெரிக்காவில் செட்டிலாகி பல ஆண்டுகள் ஆனபோதிலும் அவர் இன்னும் தனது பள்ளி தோழர்களுடன் தொடர்பில் உள்ளாராம்.

கிரிக்கெட்

கிரிக்கெட்

பள்ளிக் காலத்தில் கிரிக்கெட் விளையாடியது தான் தனக்கு ஒரு குழுவாக பணியாற்ற கற்றுக் கொடுத்தது என்று நாதெல்லா தெரிவித்துள்ளார்.

English summary
Microsoft CEO Satya Nadella used to ask a lot of questions in the class in both school and college days. His teachers still remeber him for asking question after question.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X