கார்த்தி சிதம்பரம் மீதான லுக்அவுட் நோட்டீஸை ரத்து செய்ய சுப்ரீம் கோர்ட் மறுப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: கார்த்தி சிதம்பரம் மீதான லுக்அவுட் நோட்டீசை ரத்து செய்ய சுப்ரீம் கோர்ட் மறுத்துள்ளது. வழக்கு விசாரணை வரும் 18ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்வதற்கு தடை நீடிக்கிறது.

ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு அனுமதி கொடுத்ததில் பணம் கைமாறியதாக கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக அவரது அலுவலகங்களில் சிபிஐ சோதனை நடத்தியது.

SC bars Karti Chidambaram from traveling abroad untilfurther orders

இந்நிலையில், கார்த்தி சிதம்பரத்தை தேடப்படும் நபராக அறிவித்து, சிபிஐ லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பியது. எனவே கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்வதற்கு தடை எழுந்தது. இதுதொடர்பாக கார்த்தி சிதம்பரம் சென்னை ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். லுக்அவுட் நோட்டீசுக்கு ஹைகோர்ட் இடைக்கால தடை விதித்தது. இதை எதிர்த்து சிபிஐ சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தது.

சுப்ரீம் கோர்ட் இந்த இடைக்கால தடையை ரத்து செய்து, லுக்அவுட் நோட்டீஸ் செல்லுபடியாகும் என உத்தரவிட்டது. இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது லுக்அவுட் நோட்டீசை ரத்து செய்ய மறுத்த சுப்ரீம் கோர்ட் வரும் 18ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Karti Chidambaram, son of former union minister, P Chidambaram cannot travel abroad. The Supreme Court said that it would hear the matter and pass orders at 2 pm on September 18.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற