சர்சைக்குரிய 12 ஹைகோர்ட் நீதிபதிகள் பட்டியல்: உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு!
டெல்லி: சர்சைக்குரிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பட்டியலை உச்ச நீதிமன்றம் நிராகரித்து திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள இடங்களுக்கு 12 புதிய நீதிபதிகள் பட்டியல் வெளியிடப்பட்டது. ஆனால், இந்த பட்டியலில் பாரபட்சம் காட்டப்பட்டிருப்பதாக புகார் எழுந்தது.

புதிய நீதிபதிகள் நியமனத்தில் அனைத்து சமுதாயத்தினருக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நீதிமன்ற புறக்கணிப்பு உள்ளிட்ட போராட்டங்களில் வழக்கறிஞர்கள் ஈடுபட்டனர். இதுதொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவத்தை சந்தித்தும் வழக்கறிஞர் சங்க பிரதிநிதிகள் மனு அளித்தனர்.
இந்த நிலையில், சர்ச்சைக்குரிய 12 நீதிபதிகளின் பட்டியலை சதாசிவம் தலைமையிலான தேர்வுக்குழு திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளது. அதன்படி, இன்னும் ஓரிரு நாளில் நிராகரிக்கப்பட்ட பட்டியல் தமிழக சட்டத்துறைக்கு அனுப்பி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி பொறுப்பேற்றவுடன் அவரது தலைமையிலான குழு, புதிய நீதிபதிகள் பட்டியலை தேர்வு செய்யும் என்று கூறப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications