For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"அரசியல் சாசன பெஞ்சுக்கு" மாற்றியதால் யாருக்கு அதிகாரம் என்பதில் தெளிவு ஏற்படும்: டி. ராஜா

By Mathi
Google Oneindia Tamil News

SC right to refer Rajiv assassination case to constitutional bench: D Raja
டெல்லி/சென்னை: 7 தமிழர் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மனுவை அரசியல் சாசன் பெஞ்சுக்கு மாற்றியதால் அவர்களை விடுதலை செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கா? மாநில அரசுக்கா? என்பதில் தெளிவான நிலை ஏற்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி. ராஜா கூறியுள்ளார்.

இது தொடர்பாக ராஜா கூறுகையில், 7 பேரை விடுதலை செய்வதில் யாருக்கு அதிகாரம் இருக்கிறது என்பதில் மத்திய- மாநில அரசுகளிடையே குழப்பம் இருக்கிறது. இதனால் உச்சநீதிமன்றம் தமக்கு ஏற்பட்டுள்ள சந்தேகங்களுக்கு தீர்வு காண அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றியுள்ளது. இதன் மூலம் சில தெளிவான உத்தரவுகள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்று கூறியுள்ளார்.

ஆனால் உச்ச நீதிமன்றம் அரசியல் நிர்ப்பந்தத்திற்கு பணிந்து விட்டதாக உலகத் தமிழர் பேரவைத் தலைவர் பழ.நெடுமாறன் குற்றம்சாட்டியுள்ளார்.

திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி கூறுகையில், 7 பேரை விடுவிக்கும் விவகாரத்தில் நீதிமன்றம் தயக்கம் காட்டியுள்ளது என்றர்.

இந்த வழக்கின் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு அனைவரின் எதிர்பார்ப்புக்கு மாறாக உள்ளது" என்றார்.

English summary
Communist-Party-of India (CPI) leader D Raja on Friday said the Supreme Court is right in asking the constitutional bench to decide on sensitive issues like the Rajiv Gandhi assassination case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X