For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜாதி, மதத்தின் பெயரால் வாக்கு கேட்பது சட்டவிரோதம்: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

தேர்தல்களில் ஜாதி, மதத்தின் பெயரால் வாக்கு கேட்பது சட்டவிரோதம் என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. பல ஆண்டுகாலம் நடந்து வந்த இந்துத்துவா வழக்கில் இத்தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: தேர்தல்களில் ஜாதி, மதத்தின் பெயரால் வாக்கு கேட்பது சட்டவிரோதம் என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தில் பல ஆண்டுகாலமாக நடைபெற்று வந்தது 'இந்துத்துவா வழக்கு'. அதாவது மகாராஷ்டிராவில் முதல் இந்து மாநிலம் ஏற்படுத்தப்படும் என மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் மனோகர் ஜோஷி பேசியிருந்தார். இதை எதிர்த்து என்.பி.பாட்டீல் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்துத்துவா ஆதரவு தீர்ப்பு

இந்துத்துவா ஆதரவு தீர்ப்பு

இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் 1995-ம் ஆண்டு தீர்ப்பளித்தனர். அத்தீர்ப்பில், ‘இந்துத்துவா என்பது மக்களின் வாழ்க்கைமுறை. எனவே, இந்துத்தவா, இந்து கொள்கை என்ற பெயரில் ஓட்டு கேட்பதால் எந்த வேட்பாளருக்கும் பாதிப்பில்லை என தெரிவிக்கப்பட்டது.

அப்பீல்

அப்பீல்

இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது. கடந்த 2014-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்தது. அப்போது 7 நீதிபதிகள் கொண்ட பெஞ்சுக்கு இம்மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை மாற்றப்பட்டது.

இறுதி தீர்ப்பு

இறுதி தீர்ப்பு

மேலும் தேர்தல்களில் மதத்தை பயன்படுத்தியதாக தொடரப்பட்ட பல வழக்குகளும் இதனுடன் சேர்க்கப்பட்டன. இதன் மீதான விசாரணை கடந்த அக்டோபர் மாதம் உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது. இன்று இறுதித் தீர்ப்பளிக்கப்பட்டது.

சட்டவிரோதம்

சட்டவிரோதம்

அதில், தேர்தல்களில் மதத்தின் பெயரால் வாக்கு கேட்பது என்பது சட்டப்படி தவறு. ஜாதி, மதத்தின் பெயரால் வாக்குகளை கேட்பது சட்டவிரோதமானது. தேர்தல் என்பது மதச்சார்பற்றது; ஆகையால் அதில் மதத்தை ஒருபோதும் கலக்கக் கூடாது என தீர்ப்பளிக்கப்பட்டது.

English summary
Supreme Courid sadi no politician can seek vote in the name of caste, creed, or religion, while hearing several petitions in Hindutva case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X