உ.பி.: பெண்ணை கீழே தள்ளி எட்டி உதைத்த போலீஸ்காரர்- தீயா பரவிய வீடியோ
உன்னாவ்: உத்தர பிரதேச மாநிலத்தில் நடந்த விபத்தை கண்டித்து போராடிய பெண் ஒருவரை போலீஸ்காரர் கீழே தள்ளி காலால் எட்டி உதைத்த வீடியோ பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள கங்கா காட் பகுதியில் இருக்கும் நெடுஞ்சாலையில் வேகமாக சென்ற கார் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற 2 பேரில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதை பார்த்த உள்ளூர் மக்கள் கோபம் அடைந்து விபத்தை கண்டித்து போராட்டத்தில் குதித்தனர்.
Unnao (UP): Policemen beat woman during protest after a road accident https://t.co/YahLSnTCZk
— ANI (@ANI_news) March 7, 2015 தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசாருக்கும், மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பொதுமக்கள் போலீசாரை தாக்க, போலீசார் மக்களை தாக்கினர். அப்போது போலீஸ்காரர் ஒருவர் பெண் ஒருவரை கீழே தள்ளி விட்டு காலால் எட்டி உதைத்தார். இதை பிற போலீஸ்காரர்கள் மற்றும் மக்கள் வேடிக்கை தான் பார்த்தனர்.
யாரும் அந்த பெண்ணுக்கு உதவ முன் வரவில்லை. இந்த வீடியோ ட்விட்டரில் தீயாக பரவியுள்ளது. பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துவிட்டது என்று விவாதிக்கப்படும் நிலையில் இந்த வீடியோ வெளியாகியுள்ளது.
இந்த வீடியோவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications