திருப்பதி ஏழுமலையான் கோவில் நுழைவு வாயிலில் மின்கசிவு.. பக்தர்கள் அலறியடித்து ஓட்டம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருப்பதி: ஏழுமலையான் கோவில் நுழைவு வாயிலில் மின்கசிவு ஏற்பட்டதால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரதான நுழைவு வாயிலில் உள்ள ஸ்கேனரில் இருந்து இன்று மின்கசிவு ஏற்பட்டது. மின்கசிவினால் பக்தர்கள் சிலபேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

Short circuit in the scanner at main entrance of the Tirupathi Ezhumalayyan temple

இந்த தகவல் பரவியதால் பக்தர்கள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். அப்போது கீழே விழுந்து சிலர் காயமடைந்தனர்.

இதனை அடுத்து மின்சாரம் நிறுத்தப்பட்டு தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கானோர் வந்து செல்லும் திருப்பதி கோவிலில் மின்கசிவு ஏற்பட்டது பக்தர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Short circuit in the scanner at main entrance of the Tirupathi Ezhumalayyan temple. Some of the devotees have been injured in this incident

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற