சோனியாவுடன் சித்தராமையா திடீர் சந்திப்பு! ஜெ. விடுதலையை எதிர்த்து அப்பீல் செய்வது குறித்து ஆலோசனை!!
டெல்லி: காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியை கர்நாடகா முதல்வர் சித்தராமையா திடீரென சந்தித்து பேசியுள்ளார். இச்சந்திப்பின் போது சொத்து குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து இருவரும் ஆலோசித்ததாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சென்ற சித்தராமையா சோனியா காந்தியை தனியே சந்தித்து பேசியுள்ளார்.

அப்போது கர்நாடக மாநில அரசியல் நிலவரம் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. மேலும் ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து சோனியாவிடம் ஆலோசனைகள சித்தராமையா கேட்டதாகவும் தெரிகிறது.
இது குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த சித்தராமையா, சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்டோரை விடுவித்த கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மாநில சட்டத்துறை ஆய்வு செய்து வருகிறது.
சட்டத்துறையின் அறிக்கை கிடத்துடன் மேல்முறையீடு செய்வது குறித்து முடிவெடுக்கப்படும். பொதுவாக மாநில விவகாரங்களில் கட்சி மேலிடம் தலையிடாது என்றார்.
ஜெயலலிதாவுக்கு ஆதரவாக பல்வேறு கர்நாடகா காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் குரல் கொடுத்து வரும் நிலையில் சோனியாவுடனான சித்தராமையாவின் சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.
-
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications