For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராகுலை எதிர்த்து பாஜக வேட்பாளராக நடிகை ஸ்மிருதி இரானி - இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு?

By Mathi
|

டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கு எதிரான வேட்பாளர்களை பாரதிய ஜனதா இன்று அறிவிக்க இருக்கிறது.

லோக்சபா தேர்தலுக்கான பாஜக வேட்பாளர்கள் பல கட்டங்களாக அறிவிக்கப்பட்டு வருகின்றனர். காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு எதிராக மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் உமாபாரதியையும் ராகுல் காந்திக்கு எதிராக நடிகை ஸ்மிருதி இரானியையும் பாஜக நிறுத்தக் கூடும் என்று கூறப்பட்டு வருகிறது.

Smriti Irani against Rahul Gandhi? BJP to decide today

ஆனால் உமாபாரதியோ, தாம் ஜான்சி தொகுதியில் போட்டியிடுவேன் என்று உறுதியாக கூறியிருக்கிறார். இந்நிலையில் டெல்லியில் இன்று கூடும் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் குழுக் கூட்டத்தில் சோனியா, ராகுலுக்கு எதிரான வேட்பாளர்கள் முடிவு செய்யபட இருக்கின்றனர்.

ஏற்கெனவே சோனியா, ராகுலுக்கு எதிராக யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்பது குறித்து தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.ன் தலைவர்களுடன் பாஜகவினர் ஆலோசனை நடத்தியுள்ளனர். இன்றைய கூட்டத்தின் முடிவில் ராகுலுக்கு எதிராக அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்றே பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

English summary
The BJP's election committee is expected to decide today who the party will field against Congress president Sonia Gandhi and her son and deputy Rahul Gandhi in their Uttar Pradesh constituencies of Rae Bareli and Amethi
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X