For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

”10 லட்ச ரூபாய்” பாண்டு பத்திரத்தைக் தொலைத்த காங். தலைவர் சோனியா!

|

டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, இந்தியன் ரெயில்வே பைனான்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்திடமிருந்து வாங்கிய ரூபாய் 10 லட்சம் மதிப்புள்ள வரிவிலக்கு பாண்டு பத்திரங்கள் தொலைந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் சோனியா காந்தி தாக்கல் செய்த வேட்புமனுவில் அவர் இந்த ரெயில்வே பாண்டுகளின் விபரங்களை பட்டியலிட்டிருந்தார். மேலும் பாண்டுகள் தொலைந்து வி்ட்டதால் தற்காலிக சான்றிதழ் வழங்குமாறு ஐஆர்எஃப்சி நிறுவனத்திற்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

Sonia Gandhi misses Rs 10 lakh worth bonds

இதுதொடர்பாக ஐஆர்எஃப்சி நிறுவனம் கடந்த 21 ஆம் தேதி நாளிதழ்களில் வெளியி்ட்டுள்ள பொது அறிவிப்பில் "ரூபாய் 10 லட்சம் மதிப்புள்ள சுமார் 1000 பாண்டு பத்திர சான்றிதழ்கள் தொலைந்துவிட்டதாக சோனியா காந்தி தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தொலைந்து போன பாண்டுகளுக்கு நிகராக தற்காலிக சான்றிதழ்களை வழங்குமாறும் சோனியா தரப்பிலிருந்து வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டிருந்தது.

"தொலைந்துபோன பாண்டு பத்திரங்களை யாராவது கண்டெடுத்தால் அல்லது அது குறித்து தகவல் அறிந்தால் 15 நாட்களுக்குள் ஐஆர்எஃப்சி நிறுவனத்திற்கு தெரிவிக்கலாம்" என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சோனியா காந்தி தன்னிடம் உள்ள ரூபாய் 9 கோடி மதிப்பிலான சொத்தில், அசையும் சொத்தாக இந்த பாண்டு பத்திரங்களை வைத்துள்ளதாக வேட்புமனுவில் குறிப்பிட்டிருந்தார்.

English summary
Sonia Gandhi complained that her bond about properties missed. And, the worth of the bond is nearly 10 lakhs.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X