For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பட்ஜெட் 2018: நிதியமைச்சர் அருண் ஜேட்லி பற்றிய சில சுவாரஸ்யங்கள்!

2018 நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யப் போகும் நிதியமைச்சர் அருண் ஜேட்லி பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    2018 பட்ஜெட் முக்கிய வரிகள் என்ன தெரியுமா ?

    டெல்லி : 2018- 19 நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யப்போகும் நிதியமைச்சர் அருண்ஜேட்லியை தான் செய்திகளில் டாப் 1 பெர்சனாலிட்டி. பிப்ரவரி 1ல் அவர் தாக்கல் செய்யப்போகும் பட்ஜெட்டில் என்னென்ன அம்சங்கள் இருக்கிறது என்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அருண்ஜேட்லி இன்று இந்த அளவிற்கு உயர்வதற்கு காரணமான அவருடைய வாழ்க்கைப் பயணத்தின் முக்கிய விஷயங்களை இங்கே பார்க்கலாம்.

    பாஜக அரசு தனது ஐந்தாண்டு கால ஆட்சியில் தாக்கல் செய்யும் கடைசி பட்ஜெட் இது என்பதால் 2018 மத்திய பட்ஜெட் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் 2019ல் நாடாளுமன்றம் பொதுத்தேர்தலை சந்திக்க உள்ளது.

    திங்கட்கிழமை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியுள்ள நிலையில், பிப்ரவரி ஒன்றாம் தேதி இந்த ஆண்டிற்கான முழு நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் அருண்ஜேட்லி தாக்கல் செய்கிறார். இந்நிலையில் அருண் ஜேட்லி இந்த உயர்ந்த நிலைக்கு வர அவர் தன் வாழ்க்கையில் கடந்து வந்த பாதைகள் என்ன என அறிந்து கொள்வது பயனுள்ளதாக இருக்கும்.

    அருண்ஜேட்லி வகித்த அமைச்சர் பொறுப்புகள்

    அருண்ஜேட்லி வகித்த அமைச்சர் பொறுப்புகள்

    1952, டிசம்பர் 28ல் பிறந்த அருண் ஜேட்லி, 16வது லோக்சபையில் மத்திய அமைச்சராக இருக்கிறார். அருண்ஜேட்லி நிதியமைச்சராக பொறுப்பு வகிப்பது இதுவே முதன்முறை. இதற்கு முன்னர் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் வர்த்தகத் துறை அமைச்சர், சட்ட அமைச்சரக அருண்ஜேட்லி செயல்பட்டிருக்கிறார்.

    அசர வைத்த உரையாடல்

    அசர வைத்த உரையாடல்

    கம்பெனி விவகாரத்துறை அமைச்சர், தகவல் தொழில்நுட்பத்துறையின் அமைச்சராகவும் அருண் ஜேட்லி பதவி வகித்துள்ளார். ஜேட்லி வர்த்தகத் துறை அமைச்சராக இருந்த போது உலக வர்த்தகர்கள் மாநாட்டில் இந்தியா சார்பில் உரையாற்றினார். அப்போது உலக நாடுகள் சந்தைகளுக்கு ஏற்க லாபத்தை அதிகரிக்க விவசாய மானியத்தை குறைக்காமல் வளர்ச்சியை எப்படி சாத்தியமாக்குவது என்று உரையாற்றினார்.

    ஜேட்லியின் கல்வி பின்புலம்

    ஜேட்லியின் கல்வி பின்புலம்

    பஞ்சாபில் இந்து பிராமண குடும்பத்தில் பிறந்த ஜேட்லி, டெல்லி செயின்ட் சேவியர் பள்ளியில் (1959 - 67) படித்தார். பின்னர் 1973ம் ஆண்டில் வர்த்தகத்தில் பட்டதாரி பட்டம் பெற்று 1977ம் ஆண்டில் டெல்லி பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை முடித்தார். தொழில் ரீதியில் அவர் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர்.

    மாணவர் தலைவர்

    மாணவர் தலைவர்

    70களில் மாணவராக இருந்த போது அகில பாரதிய வித்யார்தி பரிஷத் அமைப்பின் தலைவராகவும் தீவிர உறுப்பினராகவும் செயல்பட்டவர். இதனைத் தொடர்ந்து 1974ம் ஆண்டில் டெல்லி பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1989ம் ஆண்டில் விபி சிங் அரசால் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார்.

    1991ல் முதல் பாஜகவில்

    1991ல் முதல் பாஜகவில்

    1991ம் ஆண்டு முதல் பாஜகவின் செயற்குழு உறுப்பினராக இருக்கும் ஜேட்லி, ராஜ்யசபாவின் அவைத் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி அரசின் சார்பில் முன்மொழியப்பட்டவர். 2000ம் ஆண்டு முதல் டெல்லிமேலவையின் உறுப்பினராக இருக்கும ஜேட்லி 1999ம் ஆண்டு முதல் அமைச்சர் பதவிகளை வகித்து வருகிறார்.

    உள்கட்டமைப்பு வசதிகளுக்கு முக்கியத்துவம்

    உள்கட்டமைப்பு வசதிகளுக்கு முக்கியத்துவம்

    அருண் ஜேட்லி தனக்கென தனியாக ஒரு இணையதளத்தை www.arunjaitley.com வைத்துள்ளார். அவருடைய முகநூல் பக்கத்தில் சுமார் 31 லட்சம் பேர் விரும்பிப் பார்க்கின்றனர். ஆசிய வளர்ச்சி வங்கியின் கவர்னர்கள் போர்டில் இவரும் ஒரு உறுப்பினர். வளர்ச்சித் திட்டங்களின் நண்பனாக இருக்கும் ஜேட்லி உள்கட்டமைப்பு வசதி திட்டங்களுக்கு உடனடியாக ஒப்புதல் அளித்துவிடுவாராம்.

    பிசிசிஐயிலும் பதவி வகித்தவர்

    பிசிசிஐயிலும் பதவி வகித்தவர்

    2009 முதல் 2014 முதல் வரை ஜேட்லி ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவராக இருந்துள்ளார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் முதலீடுகளை பாதிக்கும் தன்னிச்சையான வரியை எதிர்த்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தவர். பிசிசிஐயின் துணைத் தலைவராக அருண்ஜேட்லி இருந்துள்ளார் ஆனால் ஐபிஎல் ஏல முறைகேடுகளையடுத்து தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தவர்.

    English summary
    This years full budget speech is going to deliver on 1st of February at this time let us we know about the man who deliver the budget speech it is none other than FM Arun Jaitley and what are all the important events in his life to reach this level today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X