எம்.பி., எம்.எல்.ஏ., மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க சிறப்பு கோர்ட்.. உச்சநீதிமன்றம் அனுமதி
டெல்லி : எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள், தண்டிக்கப்படவர்கள் தேர்தல்களில் போட்டியிட நிரந்தர தடை விதிக்கக் கோரும் பொது நல வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டு இருந்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிப்பதற்காக ஏன் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கக்கூடாது என்று கேள்வி எழுப்பி இருந்தது.
இதில் பதில் அளிக்க மத்திய அரசுக்கு ஆறு வார காலம் அவகாசமும் வழங்கப்பட்டது. இந்த வழக்கில், சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கபடும் என்று என்று மத்திய அரசு உறுதி அளித்து இருந்தது.இந்நிலையில், இன்று சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டு உள்ளது.
எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மீது அதிக குற்ற வழக்குகள் பதிவாகும் தமிழகம் ,கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கவும், அவை மார்ச் 1ம் தேதி முதல் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
நாடு முழுவதும் 1581 வழக்குகள் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மீது நிலுவையில் உள்ளதாகவும், அவை ஓராண்டிற்குள் விசாரித்து முடிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்து உள்ளது.