For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை வழக்கு.. உடனடியாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு!

பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேரை தொடர்பான வழக்கு விரைந்து முடிக்க பேரறிவாளன் தரப்பில் மனு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை உடனடியாக விசாரிக்க இயலாது என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: பேரறிவாளன், நளினி ஆகியோரின் அவர்களின் விடுதலையில் தொடர்ந்து சுணக்கம் நிலவி வருகிறது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன் உள்ளிட்ட 7 பேர் கடந்த 26 ஆண்டுகளாக சிறையில் வாடி வருகின்றனர்.

தமிழக அரசு கடந்த 2000-ம் ஆண்டு, அரசியலமைப்பு சட்டம் 161-ன் படி, நளினிக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை, ஆயுள் தண்டனையாக குறைத்தது.

விடுதலை அறிவிப்பு

விடுதலை அறிவிப்பு

மேலும் இந்த 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு தமிழக சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. இந்த விடுதலையை எதிர்த்து மத்திய அரசு வழக்கு தொடர்ந்தது. இதனால் 7 பேரின் விடுதலை செய்யப்படுவது தடுக்கப்பட்டது.

எதிர்த்து மனு

எதிர்த்து மனு

மேலும், இந்த வழக்கும் நீண்ட நாட்களாக விசாரிக்கப்படாமலேயே உள்ளது. இதனால் இந்த வழக்கினை உடனடியாக விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும் என பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்.

சுப்ரீம் கோர்ட் திட்டவட்டம்

சுப்ரீம் கோர்ட் திட்டவட்டம்

இந்நிலையில், இந்த வழக்கை உடனே விசாரிக்க இயலாது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு மறுப்பு தெரிவித்துள்ளது. இதனால் 7 பேரின் விடுதலை மீண்டும் தள்ளிப் போகும் நிலை உருவாகியுள்ளது.

தவிப்பு

தவிப்பு

தொடர்ந்து 26 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளன், நளினி ஆகியோர் தொடர்ந்து விடுதலை தொடர்பாக மனு அளிப்பதும், அதனை மத்திய, மாநில அரசுகள், நீதிமன்றங்கள் மறுதலிப்பதும் தொடர் கதையாக நடந்து வருகிறது.

English summary
Supreme Court has refused to Perarivalan plea for releasing of him and other six.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X