For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கர்நாடகாவில் உண்மையிலேயே தண்ணீர் இல்லையா.. ஆய்வு செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவு

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: கர்நாடகா நீர் இருப்பு விவரங்களை ஆய்வு செய்ய காவிரி மேற்பார்வை குழுவிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அரசின் அட்டார்னி ஜெனரல் முகுல் ரோக்தகி தாக்கல் செய்த மனு, மற்றும் தமிழகத்திற்கு தினமும் 6 ஆயிரம் கன அடி நீரை தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கடந்த வெள்ளிக்கிழமை உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சீராய்வு செய்ய கர்நாடகா தாக்கல் செய்த மனு ஆகியவை இன்று, அமித் மிஸ்ரா மற்றும் லலித் குமார் ஆகிய 2 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.

Supreme Court says that the supervisory panel must visit the Cauvery river basin

அப்போது கர்நாடகா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நாரிமன், சுப்ரீம் கோர்ட் இஷ்டப்படியெல்லாம் தமிழகத்திற்கு தண்ணீர் விடச்சொல்வதாக குற்றம்சாட்டினார். உண்மை நிலையை தெரிந்து கொண்டு, உத்தரவை பிறப்பிக்குமாறு நாரிமன் வேண்டினார்.

இதையேற்ற நீதிமன்றம், கர்நாடகா அணைகளை ஆய்வு செய்து அறிக்கை தர காவிரி மேற்பார்வை குழுவுக்கு உத்தரவிட்டது. அது
குறித்த ஆய்வு அறிக்கையை அக்டோபர் 17க்குள் தாக்கல் செய்யவும், நீதிமன்றம் உத்தரவிட்டது.

English summary
Supreme Court says that the supervisory panel must visit the Cauvery river basin and report back by October 17.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X