பழமையான இந்து கோயிலின் ஒரு பகுதியே தாஜ்மஹால்: பாஜக தலைவர் பேச்சால் சர்ச்சை!
லக்னோ: பழமையான இந்து கோயிலின் ஒரு பகுதியே தாஜ்மஹால் என உத்திரப்பிரதேச மாநில பாஜக தலைவர் லட்சுமி காந்த் பாஜ்பாய் பேசியிருப்பது சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.
கடந்த 13ஆம் தேதி நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ஆஸம்கான், ‘தாஜ்மகாலை உத்தரப் பிரதேச மாநில வக்ஃபு வாரியத்தின் சொத்தாக அறிவிக்க வேண்டும் என்றும், தாஜ்மகாலின் நிர்வாகியாக தன்னை நியமிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் உத்திரப்பிரதேச மாநில பாஜக தலைவர் பாஜ்பாய், பஹ்ராய்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தாஜ்மஹால் இருக்கும் இடத்தில், தேஜோ மகாலய கோயில் இருந்தது. அந்த கோயில் நிலத்தை ராஜா ஜெய் சிங்கிடம் இருந்து முகலாயப் பேரரசர் ஷாஜஹான் விலைக்கு வாங்கினார். இதற்கான ஆவணங்கள் உள்ளன.
சமாஜவாதி கட்சியின் மூத்த தலைவர் ஆஸம்கான், வக்ஃபு வாரிய சொத்துகளை முதலில் அபகரித்தார். தற்போது, தாஜ்மஹாலை அவர் குறிவைத்துள்ளார். தாஜ்மஹாலில் 5 முறை தொழுகை நடத்த வேண்டும் என்ற அவரது கனவு ஒருபோதும் நிறைவேறாது எனத் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து, அனைத்து இந்திய ஷியா அமைப்பின் சட்ட அமைப்பு தெரிவிக்கையில், "தாஜ்மஹால், நாட்டின் சொத்தாகும். அதை சன்னி அமைப்பிடமோ அல்லது ஷியா அமைப்பிடமோ அளிக்கக் கூடாது. ஏற்கெனவே தங்களிடம் இருக்கும் மசூதிகளை சன்னி, ஷியா பிரிவினரால் பராமரிக்க இயலாதபோது, தாஜ்மஹாலை எப்படி கவனிப்பார்கள்' என்று தெரிவித்துள்ளது.
தாஜ்மஹால் இந்து கோயிலின் ஒரு பகுதி என்று பாஜக தலைவர் கூறியிருப்பதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications