For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு: பெங்களூரில் நாளை தமிழ் அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டம்!

By Mathi
Google Oneindia Tamil News

பெங்களூர்: இலங்கை அதிபர் ராஜபக்சேவின் டெல்லி வருகையைக் கண்டித்து பெங்களூரில் தமிழ் அமைப்புகள் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளன.

டெல்லியில் நாளை மறுநாள் நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக பொறுப்பேற்க இருக்கிறார். இந்த பதவியேற்பு விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சே பங்கேற்க உள்ளார்.

இதைக் கண்டித்து தமிழகத்தில் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டெல்லியில் நாளை மறுநாள் மதிமுக பொதுச்செயலர் வைகோ தலைமையில் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இந்நிலையில் பெங்களூரில் தமிழ் அமைப்புகள் ஒருங்கிணைந்து பெங்களூர் நகரசபை முன்பாக (Puttannashetty Town Hall) நாளை மாலை 3 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை நாம் தமிழர் இயக்கத்தின் கர்நாடக கிளை மற்றும் கர்நாடகத் தமிழ் மக்கள் இயக்கம் ஏற்பாடு செய்துள்ளது.

English summary
A Protest against Sri lanka President Rajapaksshe's visit to India will be held at Bangalore on Sunday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X