மண்டையோடு மண்சட்டியுடன் தமிழக விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டம் - தற்கொலை முயற்சி

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் திடீரென தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றனர்.

டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் கடந்த இரு தினங்களாக அரை நிர்வாணத்துடன் நடத்தி வருகின்றனர். மண்டையோடு, மண்சட்டி ஏந்தி விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் டெல்லி மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

அரைநிர்வாண போராட்டம்

அரைநிர்வாண போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும், விளை பொருட்களுக்கு நியாயமான விலை வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் டெல்லியில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது. அந்த சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் ஏராளமான விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர்.

தற்கொலை முயற்சி

டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் அரை நிர்வாணத்துடன் நடத்தி வரும் இந்த போராட்டம் டெல்லி மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. பெண்களும் கூட அரைநிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மண்டையோடு, மண்சட்டி சகிதமாக போராடி வருகின்றனர்.

தற்கொலை முயற்சி

இந்த நிலையில் நேற்று காலை அந்த போராட்டக்குழுவில் இருந்த மேட்டுப்பாளையம் மூவானுரைச் சேர்ந்த அகிலன்,25, பிள்ளையார் பாளையத்தைச் சேர்ந்த ரமேஷ்,19 ஆகிய 2 பேரும் அங்குள்ள ஒரு வேப்பமரத்தில் ஏறினார்கள். திடீரென அவர்கள் தங்களது வேட்டியை பயன்படுத்தி மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.

விவசாயிகள் பதற்றம்

இதைப் பார்த்த மற்ற விவசாயிகள் கூச்சல் போட்டனர். அதைத் தொடர்ந்து அங்கு போராட்டம் நடத்திய பிற மாநிலத்தவர்கள் கூடினார்கள். தொடர்ந்து, தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் சேர்ந்து அந்த 2 விவசாயிகளையும் கீழே இறங்க வைத்தனர்.

போலீஸ் பாதுகாப்பு

போலீஸ் பாதுகாப்பு

அப்போது விவசாயிகள் 2 பேரும் மூச்சு விட சற்று சிரமப்பட்டனர். உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் மீண்டும் போராட்ட இடத்துக்கு வந்தனர். தொடர்ந்து, அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. தமிழக விவசாயிகள் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தலைநகர் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
TN Farmers are going to fasting protest for 100 days in Delhi Jantar Mantar. More than 150 farmers from Tamil Nadu have staged a protest demanding that the Centre declare a drought relief package and loan waiver for peasants from the southern state.
Please Wait while comments are loading...