உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தற்கொலைக்கு முயன்ற தமிழக விவசாயிகள் டெல்லியில் கைது
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழக விவசாயிகள் இன்று தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லி: டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழக விவசாயிகள் இன்று தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.
டெல்லி ஜந்தர்மந்தரில் இரண்டாவது கட்டமாக தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்று வரும் இந்த போராட்டம் இன்று 76வது நாளாக நீடிக்கிறது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். நாள்தோறும் விதவிதமான போராட்டங்களை தமிழக விவசாயிகள் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் 76வது நாளான இன்று போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழக விவசாயிகள் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து தற்கொலைக்கு முயன்ற விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications