டெல்லியில் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணி தூதர்கள் முகாம்.. "இரட்டை இலை"யைக் கைப்பற்ற "தள்ளுமுள்ளு"!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: சென்னையில் நடைபெற்ற பொதுக்குழு தீர்மானங்களின் அடிப்படையில் தேர்தல் ஆணையத்திடம் சாதகமான முடிவை பெற ஈபிஎஸ், ஓபிஎஸ் அணி தூதர்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.

அதிமுக அம்மா, அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணிகள் நேற்று பொதுக்குழுவில் இணைந்தன. இதையடுத்து அதிமுகவில் பொதுச்செயலர் பதவி ஒழிக்கப்பட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன.

டெல்லியில் முகாம்

டெல்லியில் முகாம்

மேலும் பொதுச்செயலராக சசிகலாவை நியமித்ததையும் ரத்து செய்தது இந்த பொதுக்குழு. இந்த நிலையில் ஈபிஎஸ், ஓபிஎஸ் அணியின் தூதர்களாக அமைச்சர்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.

சாதகமான முடிவு

சாதகமான முடிவு

பொதுக்குழு தீர்மானங்களின் அடிப்படையில் டெல்லியின் உதவியுடன் எப்படியாவது தேர்தல் ஆணையத்தில் சாதகமான முடிவைப் பெற்றுவிடலாம் என அமைச்சர்கள் மும்முரமாக முயற்சிக்கின்றனர். இருப்பினும் அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை வரும் 23-ந் தேதி நடைபெற உள்ளது.

அமைச்சர்கள் தீவிரம்

அமைச்சர்கள் தீவிரம்

அதுவரை தேர்தல் ஆணையத்திடம் இருந்து எந்த முடிவும் வந்துவிடாது. இருப்பினும் சாதகமான முடிவுகளை மேற்கொள்வதற்கான லாபிகளில் அமைச்சர்கள் தீவிரம் காட்டுவதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினகரன் தரப்பு மனு

தினகரன் தரப்பு மனு

அதேநேரத்தில் தேர்தல் ஆணையத்தில் தங்களைக் கேட்காமல் எந்த முடிவையும் அறிவிக்க கூடாது என தினகரன் தரப்பும் மனுத் தாக்கல் செய்திருக்கிறது. இதனை முறியடிக்கும் வகையில் வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறது எடப்பாடி தரப்பு.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Sources said that the Team EPS is lobbying for Two Leaves Symbol in Delhi.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற