ஜிஎஸ்எல்வி எப் 10 ராக்கெட் கிரையோஜெனிக் எஞ்சினில் கோளாறு...திட்டம் தோல்வி - இஸ்ரோ தலைவர் சிவன்
பாதுகாப்பு ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த ஈ.ஓ.எஸ்.03 செயற்கைக்கோள் அதிகாலை விண்ணில் செலுத்தப்பட்டது. செயற்கைக் கோளை சுமந்து சென்ற ஜிஎஸ்எல்வி எப் 10 ராக்கெட்டில் தொழில் நுட்பக்கோளாறு ஏற்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் கூ
ஸ்ரீஹரிகோட்டா: விண்ணில் செலுத்தப்பட்ட ஜிஎஸ்எல்வி எப் 10 ராக்கெட்டில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு பயணம் தோல்வியடைந்ததாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். ராக்கெட்டின் கிரையோஜெனிக் எஞ்சின் பகுதியில் ஏற்பட்ட சிக்கலால் திட்டம் தோல்வியடைந்ததாக கூறப்பட்டுள்ளது.
Recommended Video
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் பூமி கண்காணிப்புக்காக 2 ஆயிரத்து 268 கிலோ எடை கொண்ட ஈ.ஓ.எஸ்.03 என்ற செயற்கைகோளை வடிவமைத்து இருந்தது. இந்த செயற்கைக்கோளை ஜிஎஸ்எல்வி எப் 10 ராக்கெட்டில் பொருத்தி இன்று அதிகாலை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.

ராக்கெட் விண்ணில் பாய்ந்த உடன் விஞ்ஞானிகள் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அந்த மகிழ்ச்சி சில நிமிடங்கள் கூட நீடிக்கவில்லை. ராக்கெட்டின் பயணம் திட்டமிட்ட இலக்கை அடைய முடியவில்லை ஈ.ஓ.எஸ்.03 செயற்கைக் கோளை வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்த இயலவில்லை.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், ராக்கெட்டின் கிரையோஜெனிக் எஞ்சினில் ஏற்பட்ட சிக்கலால் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த முடியவில்லை என்று கூறினார். கிரையோஜெனிக் எஞ்சினில் ஏற்பட்ட தொழில் நுட்பக்கோளாறு காரணமாக ஜிஎஸ்எல்வி எப் -10 திட்டம் தோல்வியடைந்ததாக குறிப்பிட்டார்.
ஈ.ஓ.எஸ்.03 செயற்கைக்கோள் முதலில் கடந்த ஆண்டு மார்ச் 5 ஆம் தேதியன்று விண்ணில் செலுத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக செயற்கைக்கோள் செலுத்தப்படுவது தள்ளிவைக்கப்பட்டது.
பல மாதங்களுக்குப் பிறகு இன்று செலுத்தப்பட்ட ராக்கெட்டும் தொழில்நுட்பக்கோளாறு காரணமாக தோல்வியடைந்துள்ளது. இதுவரை செலுத்தப்பட்ட 14 ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுகளில் 4 ராக்கெட் திட்டங்கள் தொழில் நுட்பக் கோளாறு காரணமாக தோல்வியடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications