இந்தியாவின் மாபெரும் அரசியல் கருத்துக் கணிப்பு.. நீங்கள் பங்கேற்றீர்களா?
 • search

தெலுங்கானாவில் அசுத்த குட்டையில் குளிக்குமாறு தலித்துகளை சித்ரவதை செய்த பாஜக நிர்வாகி!

By Lakshmi Priya
FOLLOW ONEINDIA TAMIL ON
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
   அசுத்த குட்டையில் குளிக்குமாறு தலித்துகளை சித்ரவதை செய்த பாஜக நிர்வாகி!- வீடியோ

   ஹைதராபாத்: தெலுங்கானாவில் மணல் அள்ளுவதை தடுக்க தட்டி கேட்ட தலித்துகளை அசுத்தமான நீரில் மூழ்குமாறு பாஜக நிர்வாகி அச்சுறுத்திய வீடியோ வைரலாக பரவி வருகிறது.

   அபங்காபட்டினம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கொண்ட்ரா லட்சுமணன் மற்றும் ராஜேஷ்வர் ஆவார். இருவரும் தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள். பாஜகவின் முன்னாள் மாவட்ட பொதுச் செயலாளர் பாரத் ரெட்டி.

   இவர் எர்ரகுண்டா குட்டை அருகே உள்ள நிலங்களில் அனுமதியின்றி மணல் அள்ளியதாக கூறப்படுகிறது. இதை அங்கிருந்த லட்சுமணனும், ராஜேஷ்வரும் தட்டி கேட்டனர்.

    மண் அள்ளுவது தவறு

   மண் அள்ளுவது தவறு

   இதனால் ரெட்டி ஆத்திரமடைந்தார். உடனே தனது கையில் ஒரு கட்டையுடன் அவர்கள் இருவரையும் தகாத வார்த்தைகளால் ரெட்டி பேசியுள்ளார். இதையடுத்து ரெட்டி அனுமதியின்றி மண் அள்ளுவது தவறு என்று கூறுவதை கேட்டவுடன் மேலும் ஆத்திரத்தின் உச்சத்துக்கே ரெட்டி சென்றுள்ளார்.

    கெஞ்சியும் பிரயோஜனம் இல்லை

   கெஞ்சியும் பிரயோஜனம் இல்லை

   இதையடுத்து அங்கிருந்த அசுத்தமான குட்டை ஒன்றில் மூழ்குமாறு ரெட்டி கூறியுள்ளார். தங்களை மன்னிக்குமாறு கையெடுத்து கெஞ்சி கேட்டும் அதை பரிசீலனை செய்ய ரெட்டி முன்வரவில்லை.

    செப்டம்பரில் நிகழ்ந்த சம்பவம்

   செப்டம்பரில் நிகழ்ந்த சம்பவம்

   இதையடுத்து வேறு வழியில்லாமல் அந்த இருவரும் அந்த குட்டையில் மூழ்கி எழுந்தனர். இந்த வீடியோ ரெட்டியுடன் இருந்த ஒருவரே எடுத்து சமூகவலைதளங்களில் பரப்பியுள்ளார். இந்த சம்பவம் கடந்த செப்டம்பர் மாதம் நிகழ்ந்தது என்றாலும் அந்த வீடியோ ஞாயிற்றுக்கிழமை வெளியானது. இதையடுத்து அங்குள்ள தலித் தலைவர் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் ரெட்டி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

   அப்ஸ்கான்ட் ஆன ரெட்டி

   ரெட்டி தலைமறைவாக உள்ளார். ரெட்டி மீதான அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்ட இருவரும் புகார் கொடுக்க தயக்கம் காட்டுகின்றனர். எனினும் வீடியோ உள்ளதை பார்க்கும் போது இருவரையும் ரெட்டி கொடுமை செய்தது வெளிப்படுகிறது என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தனர்.

   வரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்! - பதிவு இலவசம்!

   English summary
   A Bharatiya Janata Party leader, who allegedly caned two Dalit men and forced them to take a dip in dirty waters for questioning his illegal mining of gravel, was booked by the police in Telangana’s Nizamabad, officials said on Monday.

   நாள் முழுவதும் oneindia
   செய்திகளை உடனுக்குடன் பெற

   We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more