சசிகலாவுடன் அதிமுக எம்பி தம்பிதுரை சிறையில் சந்திப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூரூ: சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை தம்பிதுரை எம்பி இன்று நேரில் சந்தித்தார். எடப்பாடி அரசு தினகரனுக்கு எதிராக செயல்பட்டு வரும் நிலையில் தம்பிதுரை சசிகலாவை சந்தித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ள சசிகலா பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை அவ்வப்போது அதிமுக நிர்வாகிகளும் அவரது ஆதரவாளர்களும் சந்தித்து வருகின்றனர்.

Thambidurai meets Sasikala in the Bengaluru prison

இந்நிலையில் அதிமுக எம்பியும் மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை சசிகலாவை சிறையில் சந்தித்துள்ளார். எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு தினகரனை கட்சியில் இருந்து நீக்கியது நீக்கியதுதான் என விடாப்பிடியாக உள்ளது.

அதிமுக சார்பில் நடைபெறும் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி தொடர்பாகவும் டிடிவி தினகரனுக்கு அழைப்பிதழ் வழங்கப்படவில்லை. இந்நிலையில் தம்பிதுரை சசிகலாவை சிறையில் சந்தித்துள்ளார்.

குயரசுத் தலைவர் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு கொடுப்பது தொடர்பாக தம்பிதுரை சசிகலாவுடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. சசிகலாவை தம்பிதுரை திடீரென சந்தித்திருப்பது பரபரப்பை எற்படுத்ததியுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Thambidurai meets Sasikala in the Bengaluru prison. He may discussed about the Presidential election support.
Please Wait while comments are loading...