For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டெல்லி சாலையில் வலம் வந்த "பீஸ்ட்"...!

Google Oneindia Tamil News

டெல்லி: அமெரிக்காவின் ஒவ்வொரு செயலையும் பார்த்து "பட்டிக்காட்டான் மிட்டாயைப் பார்ப்பது" போன்ற நிலைக்கு உலக மக்கள் தள்ளப்பட்டு விட்டார்கள். அந்த வரிசையில், அமெரிக்க அதிபர் பயணம் செய்யும் கார் குறித்த ஒரு "வேடிக்கை வினோத" தகவல் தொகுப்பு இது.

பீஸ்ட் - இதுதான் அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வமான ஆடம்பரமான, உலகின் அதி நவீன காரின் செல்லப் பெயர்.

இந்தக் கார் தற்போது டெல்லி வருகிறது. டெல்லிக்கு ஒபாமா குடியரசு தின விழா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளார். அப்போது இந்தக் காரில்தான் அவர் விழா நடக்கும் இடத்திற்கு வரவுள்ளார்.

லிமோசின் வகை காரான இதில் இல்லாத வசதியே இல்லையாம். வாங்க காரைச் சுற்றிப் பார்த்து விட்டு வரலாம்.

சாதா கார்தான்.. ஆனால் அசாதாரணமான வசதிகளுடன்

சாதா கார்தான்.. ஆனால் அசாதாரணமான வசதிகளுடன்

இது சாதாரண கார்தான். ஆனால் பல அசாதாரணமான வசதிகள் இதில் நிரம்பியுள்ளன. அதன் சேசிஸ், டீசல் என்ஜின், டிரான்ஸ்மிஷன் ஆகியவை செவர்லே கோடியாக் காரில் உள்ளது போலவே இருக்கும். இதன் ஹெல்லைட், பின்னால் உள்ள லைட்டுகள் ஆகியவற்றைப் பார்த்தால் கேடிலாக் கார் போலவே தோற்றம் தரும்.

காரைச் சுமக்க தனி விமானம்

காரைச் சுமக்க தனி விமானம்

இந்தக் காரை பல்வேறு நாடுகளுக்கும் அதிபர் போகும்போது கூடவே தூக்கிக் கொண்டு செல்வார்கள். இதற்காகவே சி 17 குளோப்மாஸ்டர் விமானம் ஒன்று பிரத்யேகமாக உள்ளது. இந்த விமானத்தில் இரண்டு பீஸ்ட் வகை கார்கள் அடங்கியிருக்கும்.

செம திக்

செம திக்

இந்த கார் மிகவும் பாதுகாப்பானது. அதற்கு முக்கியக் காரணம், அதன் கனரகமான வடிவமைப்புதான். இந்தக் காரின் கதவுகள் போயிங் 757 ரக விமானத்தின் கதவுகளுக்கு நிகரான எடையுடன் கூடியவையாகும். மேலும் கதவுகளின் கண்ணாடிகள் 5 இன்ச் அளவுக்கு குண்டு துளைக்க முடியாத அளவு அடர்த்தியானவை. கார் கண்ணாடியில் மொத்தம் 5 லேயர்களாக அடர்த்தி இருக்கும். எனவே எது வந்து தாக்கினாலும் சிதையாத அளவுக்கு கண்ணாடிகள் படு ஸ்டிராங்கானவையாகும்.

குட் இயர் டயர்கள்

குட் இயர் டயர்கள்

பஸ் டயர்களைப் போலத்தான் இந்த கார்களின் டயர்களும் பெரிதாக இருக்கும். குட் இயர் டயர்கள் இவை. பங்க்சர் ஆகாத அளவுக்கு இந்த டயர்கள் வலிமையானவையாகும்.

காருக்குள்ள என்ன இருக்கு

காருக்குள்ள என்ன இருக்கு

காரைத் திறந்து பார்த்தால் ஏகப்பட்ட உபகரணங்களைப் பார்க்கலாம். தீயணைப்புக் கருவிகள், ஆக்சிஸன் சிலிண்டர், அதிபரின் குரூப்பைச் சேர்ந்த ரத்த பாக்கெட்டுகள், கண்ணீர்ப் புகை குண்டு வீச்சுக் கருவிகள், துப்பாக்கிகள், கிரெனட் லாஞ்சர்கள் ஆகியவை ஒருங்கிணைத்து உள்ளே வைக்கப்பட்டுள்ளன.

ஏழு பேர் உட்காரலாம்

ஏழு பேர் உட்காரலாம்

இந்தக் காரில் அதிபர் உள்பட மொத்தம் 7 பேர் சவுகரியமாக அமர்ந்து பயணிக்க முடியும். இந்தக் காரை செலுத்தும் டிரைவர், அமெரிக்க ரகசிய சேவைப் பிரிவைச் சேர்ந்தவராக இருப்பார்.

டீசல் கார்

டீசல் கார்

இந்தக் கார் டீசலில் ஓடக் கூடியது. டீசல் காராக இதை வைத்திருப்பதற்கும் ஒரு காரணம் உள்ளது. பெட்ரோல் என்றால் சீக்கிரமே ஆவியாகக் கூடிய தன்மை கொண்டது. மேலும் ஏதாவது விபரீதம் ஏற்பட்டால் கார் சீக்கிரமே வெடித்து விடும் அபாயமும் உள்ளது. ஆனால் டீசல் மெதுவாக ஆவியாகக் கூடிய தன்மை கொண்டது. எனவேதான் டீசல் காராக இதை வைத்துள்ளனர். மேலும் பெட்ரோலுக்கு கிராக்கி அதிகம். அதேசமயம், டீசல் எங்கு போனாலும் சுலபமாக கிடைக்கும். இதுவும் ஒரு காரணமாம்.

காரா பஸ்ஸா...

காரா பஸ்ஸா...

இதைப் பார்த்தால் ஸ்போர்ட்ஸ் கார் போலவும் இல்லாமல், ஸ்கூல் பஸ் போலவும் இல்லாமல் எது மாதிரியும் இல்லாத புது மாதிரியாக வடிவமைத்துள்ளனர். இதன் டிரைவர்கள் படு திறமைசாலிகளாம். 180 டிகிரி கோணத்தில் படு வேகமாக காரைத் திருப்பக் கூடிய திறன் படைத்தவர்கள். அதி வேகத்தில் காரை பத்திரமாக செலுத்தும் திறமை படைத்தவர்களும் கூட. எந்தவிதமான சிக்கலின்போதும் காரை திறம்பட ஓட்டக் கூடியவர்கள்.

ரகசிய இடத்தில் டிரைவிங் பயிற்சி

ரகசிய இடத்தில் டிரைவிங் பயிற்சி

இந்த டிரைவர்களுக்காக மிகப் பெரிய அளவில் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இதற்காகவே ஒரு ராணுவ தளத்தில் பயிற்சி மையம் உள்ளதாம். இந்த பயிற்சி மையம் அமைந்துள்ள இடம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

15 விநாடிகளில் பஞ்சாய் பறக்கலாம்

15 விநாடிகளில் பஞ்சாய் பறக்கலாம்

காரை ஸ்டார்ட் செய்த 15 விநாடிகளில் மணிக்கு 60 மைல் வேகத்தை எட்டி விட முடியும். இந்தக் காரின் அதிகபட்ச வேகமும் மணிக்கு 60 மைல் தான்.

டுமீல் விட்டாலும் டமால் ஆகாது

டுமீல் விட்டாலும் டமால் ஆகாது

இந்தக் காரின் டீசல் டேங்க் மிகவும் பாதுகாப்பானது. துப்பாக்கியால் சுட்டால் கூட இதில் தீப்பிடிக்காத அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கூடியது.

இருந்த இடத்திலிருந்தே

இருந்த இடத்திலிருந்தே

இந்தக் காரில் பயணித்தபடியே அமெரிக்காவின் பென்டகனுடனும், துணை அதிபருடனும் தொடர்பு கொண்டு அதிபரால் பேச முடியும்.

டுபாக்கூர்களும் இருக்கு பாஸ்!

டுபாக்கூர்களும் இருக்கு பாஸ்!

ஒரே ஒரு பீஸ்ட்தான் அமெரிக்காவிடம் உள்ளது என்று நினைத்து விடக் கூடாது. இதே போல பல கார்களை வைத்துள்ளனர். அதெல்லாம் ஊரை ஏமாற்ற.. அதாவது மற்றவர்களை ஏமாற்ற. எந்தக் கார் ஒரிஜினல் என்றே தெரியாத அளவுக்கு அவற்றை வைத்துள்ளனர். பாதுகாப்புக்காக இந்த ஏற்பாடாம்.

English summary
Here are some facts and details about the Beast, the official car of US President Obama.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X