சந்திரயான் 2 நிலவுப் பயணத்தின் முதல் வெற்றி.. புவி வட்டப் பாதையில் நுழைந்தது!
Recommended Video
ஸ்ரீஹரிகோட்டா: நிலவின் தென் துருவத்தை ஆராய ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட்டில் புறப்பட்ட சந்திரயான் 2, வெற்றிகரமாக புவி வட்டப் பாதையில் நுழைந்தது. ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட்டின் செயல்திறன் 15% அதிகரித்துள்ளதாக இஸ்ரோ கூறியுள்ளது.
செயற்கைக்கோள் தற்போது நீள்வட்ட சுற்றுப்பாதையில் உள்ளது. அது மேலும் உயர்த்தப்பட்டு படிப்படியாக நிலவுக்கு நகரும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக சந்திரயான் 2 விண்கலத்தை ஏவ ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் 20 மணி நேர கவுண்டவுன் நேற்று மாலை 6.43-க்கு துவங்கியது. இதனையடுத்து சரியாக இன்று பிற்பகல் 2.43 மணிக்கு, சந்திரயான் விண்கலத்தை சுமந்து கொண்டு ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. தற்போது புவிவட்ட பாதைக்குள் வெற்றிகரமாக நுழைந்துள்ளது சந்திரயான் 2.
முன்னதாக பேசிய இஸ்ரோ தலைவர் சிவன் கடந்த 15-ம் தேதி செய்யப்பட்ட முதல் முயற்சியை போல இம்முறை ஏதேனும் தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவதற்கான சாத்தியம் இல்லை என உறுதிபட கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஒருவாரம் தாமதமாக புறப்பட்டாலும் ஏற்கனவே திட்டமிட்டப்படி செப்டம்பர் 7-ம் தேதி சந்திரயான் 2 விண்கலத்திலிருந்து விக்ரம் கலமும், பிரக்யான் ஆய்வு கலமும் நிலவில் தரையிறங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
14 நாட்கள் மட்டுமே ஆயுட்காலம் கொண்ட இரு கலங்களும் நிலவின் தென்துருவத்தில் தரையிரங்குவது முதல், இடைவிடாமல் ஆய்வு பணிகளை மேற்கொள்ள உள்ளன. அதே நேரத்தில் சந்திராயன் 2 விண்கலம் ஓராண்டு காலம் நிலவை சுற்றி வந்து முப்பரிமாண படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பும் பணியை செய்யும்.

முன்னதாக உலகிலேயே முதல் முறையாக நிலவின் தென்துருவப் பகுதியை ஆராய்ச்சி செய்ய சந்திரயான் 2 விண்கலத்தை கடந்த 15-ம் தேதி ஏவும் பணியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ மும்முரமாக ஈடுபட்டு இருந்தது.
ஆனால் ராக்கெட் ஏவப்படுவதற்கு 56 நிமிடங்களுக்கு முன் அதில் கிரையோஜெனிக் நிலையில் ஏற்பட்டிருந்த தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டது. இதனால் கவுண்டவுன் திடீர் என நிறுத்தப்பட்டு சந்திரயான்-2 விண்கல பயணமும் ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டது.
பின்னர் ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். இந்த பணி வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டதை தொடர்ந்து, விண்ணில் பாய்வதற்கு ராக்கெட் தயாரானது. இதனையடுத்து நேற்று மாலை மீண்டும் கவுண்டவுன் துவக்கப்பட்டது
உலக நாடுகள் யாருமே இதுவரை ஆராய்சி செய்யாத நிலவின் தென்துருவத்தை நோக்கி சந்திரயான் 2 விண்கலம் இன்று தனது பயணத்தை துவக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications