அப்போது மலம் அள்ளும் தொழிலாளி... இப்போது கல்லூரி பேராசிரியை! சாதித்த ஹரியானா பெண்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: மலம் அள்ளும் தொழிலாளியாக இருந்த ஹரியானா பெண் ஒருவர் நன்கு படித்து கல்லூரி பேராசிரியராக உயர்ந்து சாதனை புரிந்துள்ளது எல்லோரையும் நெகிழ வைத்துள்ளது.

கவுஷல் பன்வார் என்ற அந்த சாதனை பெண், தற்போது டெல்லியில் உள்ள மோதிலால் நேரு கல்லூரியில், சமஸ்கிருதப் பாடத்திற்கான உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

கவுஷல் பன்வார், ஹரியானா மாநிலத்தில் உள்ள கைதால் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜவுன்ட் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். தலித் பிரிவின்கீழ் வரும் வால்மிகி பிரிவைச் சேர்ந்த பன்வார், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்.

சிறு வயது முதலே, கல்வியில் ஆர்வம் கொண்ட பன்வார், மிகவும் புத்திசாலியாக வளர்ந்து வந்துள்ளார். ஆனால், அவர் வாழ்ந்த கிராமத்தில், உயர்சாதியான ராஜ்புத் இனத்தைச் சேர்ந்தவர்கள், பன்வாரை படிக்க விடாமல் பல வழிகளில் துன்புறுத்தியுள்ளனர்.

மனம் தளராத கவுஷல் பன்வார்

மனம் தளராத கவுஷல் பன்வார்

இதனால், மனம் தளராத கவுஷல் பன்வார், கல்வி மீதான ஆர்வத்தை மேலும் வளர்த்துக் கொண்டுள்ளார். பாடங்கள் குறித்து எந்நேரமும் சிந்தித்த அவர், பொது அறிவுத் தேடலையும் வளர்த்துக் கொண்டுள்ளார்.

அதிக பிரசங்கி பட்டம்

அதிக பிரசங்கி பட்டம்

பள்ளிப் பருவத்தில், வகுப்பறையில் ஆசிரியர் கேட்கும் கேள்விகளுக்கு, மற்ற உயர்சாதி மாணவர்கள் பதில் சொல்ல முடியாமல் திணற, பன்வார் மட்டும் பதில் சொல்லி அசத்துவார். ஆனால், ஆசிரியர்கள், அவரது புத்திசாலித்தனத்தை பாராட்டாமல், அதிக பிரசங்கி என திட்டி அவமானப்படுத்தியுள்ளனர்.

கழிவறையை கழுவ சொன்ன ஆசிரியர்கள்

கழிவறையை கழுவ சொன்ன ஆசிரியர்கள்

திட்டிவிடுவதோடு நிறுத்தாத ஆசிரியர்கள், பள்ளியில் உள்ள கழிவறையை சுத்தம் செய்யச் சொல்லி மிரட்டுவதையும் வாடிக்கையாகக் கொண்டிருந்தனர். இதனால் மிகவும் நொந்துபோனார் கவுஷல் பன்வார்.

குளத்தில் குளித்ததால் சாதிக் கலவரம்

குளத்தில் குளித்ததால் சாதிக் கலவரம்

ஒருமுறை தெரியாமல், கிராமத்தில் உள்ள குளத்தில் பன்வார் குளித்துவிட்டாராம். உடனே, குளத்தின் நீர் அசுத்தம் அடைந்துவிட்டதாகக் கூறி, உயர் சாதி ஆண்கள், பன்வாரின் உறவினர்களை தாக்க, ஒரு மாதத்திற்கும் மேலான சாதிக் கலவரமாக அது தொடர்ந்துள்ளது.

உயர்சாதி முன்பு தலை நிமிர்ந்து வாழ உறுதி

உயர்சாதி முன்பு தலை நிமிர்ந்து வாழ உறுதி

இந்த நிகழ்வுதான், தன்னை மிகவும் பாதித்த சம்பவம் என்றும், உயர் சாதியினர் முன்பாக, கெளரவமாக வாழ உத்வேகம் தந்தது என்றும், பன்வார் இப்போது நினைவு கூர்கிறார். அந்த உத்வேகத்தில் இப்போது வெற்றியும் பெற்றுள்ளார் பன்வார்.

மலம் அள்ளிய கொடுமை

மலம் அள்ளிய கொடுமை

மேலும், வளர்ந்த பின், மலம் அள்ளும் வேலையில் பன்வாரை ஈடுபடுத்தியும் உள்ளனர். அனைத்துவித அசிங்கங்களையும் பொறுத்துக் கொண்ட பன்வார், சமஸ்கிருதம் பாடத்தில் அதிக ஆர்வம் கொண்டு, அதனையே விரும்பி படித்தார்.

சமஸ்கிருத பேராசிரியை

சமஸ்கிருத பேராசிரியை

சமஸ்கிருதத்தில், பிஎச்டி முடித்த அவர், டெல்லி மோதிலால் நேரு கல்லுரியில், உதவிப் பேராசிரியர் வேலையைப் பெற்றுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில்,

உதாசீனம் செய்த சமூகம்

உதாசீனம் செய்த சமூகம்

‘'தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவள் என்பதால், பல விதங்களில் என்னை இந்த சமூகம் உதாசீனம் செய்தது. ஆனாலும் விடாப்பிடியாக போராடி, தற்போது பேராசிரியர் நிலைக்கு உயர்ந்துள்ளேன்.

இன்று வரை தொடரும் 'தலித்' அடையாளம்

இன்று வரை தொடரும் 'தலித்' அடையாளம்

இன்று வரை என்னை பலரும் தலித் என்றே அடையாளம் செய்கிறார்கள். எனக்கு அதைப் பற்றி கவலையில்லை. மற்றவர்களின் பேச்சை காதில் போட்டு அதில் கவனம் செலுத்தாமல், நமது திறமையை வெளிப்படுத்தினால் மட்டுமே நினைத்ததை சாதிக்க முடியும்,'' என்று பன்வார் கூறுகிறார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Kaushal Panwar is an assistant professor in the Sanskrit department in Motilal Nehru College, Delhi University. Panwar born in the Valmiki caste, among the lowest of low castes in Haryana.
Please Wait while comments are loading...