For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஏழுமலையானின் நகைகள் மதிப்பு ரூ.50000 கோடி, அசையா சொத்து மதிப்பு ரூ.90000 கோடி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

திருப்பதி: திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.50000 கோடி மதிப்பிலான நகைகள் உள்ளனவாம். தவிர நாடு முழுவதும் 4,200 ஏக்கர் அசையா சொத்துகள் உள்ளன. இவற்றின் மதிப்பு ரூ.90 ஆயிரம் கோடியாகும். ஏழுமலையானை நாள்தோறும் சுமார் 45 ஆயிரம் முதல் 65 ஆயிரம் பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். நாள் ஒன்றுக்கு ரூ.80 லட்சம் முதல் ரூ.1.5 கோடி வரை உண்டியல் காணிக்கையாக கிடைக்கிறது.
ஏழுமலையானின் ஆண்டு வருமானம் ரூ.1500 கோடி முதல் ரூ.2000 கோடியாகும்.

நாள்தோறும் ஏழுமலையான தரிசிக்க வரும் பக்தர்கள் தங்கம், வைரம், வெள்ளி, பணம் என பல வகைகளில் பக்தர்கள் காணிக்கை அளித்துவருகின்றனர். சிலர் தங்களுக்குச் சொந்த நிலங்களையும் தானமாக கொடுக்கின்றனர்.

தங்க, வைர நகைகள்

தங்க, வைர நகைகள்

2009-ம் ஆண்டு ஆந்திர உயர் நீதிமன்றத்தில் தேவஸ்தானம் தெரிவித்த கணக்குப்படி, ரூ.12,000 கோடி மதிப்பிலான தங்க நகைகளும், ரூ.11,000 கோடி மதிப்பிலான வைர, வைடூரிய, வெள்ளி ஆபரணங்களும் உள்ளன.

ரூ.50,000 கோடி நகைகள்

ரூ.50,000 கோடி நகைகள்

ஏழுமலையான் அணியும் நகைகளில் உள்ள சில கற்களின் மதிப்பை சரியாக கணிக்க முடியவில்லை என தெரிவித்திருந்தது. இவற்றின் மதிப்பு ரூ.50,000 கோடி எனக் கூறப்படுகிறது.

அசையா சொத்துக்கள்

அசையா சொத்துக்கள்

இது தவிர, ஏழுமலையானுக்கு நாடு முழுவதும் அசையா சொத்துகள் உள்ளன. இதில் கோயில்கள் தவிர, பக்தர்கள் காணிக்கையாக அளித்த சொத்துகளும் அடங்கும்.

4,200 ஏக்கர்

4,200 ஏக்கர்

ஆந்திரம், தெலங்கானா, தமிழகம், புதுவை, கர்நாடகம், கேரளம் போன்ற தென் மாநிலங்களில் மட்டுமின்றி டெல்லி, கொல்கத்தா, மும்பை என முக்கிய நகரங்களிலும் ஏராளமான சொத்துகள் உள்ளன. நாடு முழுவதும் மொத்தம் 4,200 ஏக்கர் அசையா சொத்துகள் ஏழுமலையானுக்கு உள்ளன.

ரூ.90,000 கோடி

ரூ.90,000 கோடி

இவற்றின் அரசு மதிப்பு ரூ.32,500 கோடி என கடந்த 2009-ல் தேவஸ்தானம் தெரிவித்திருந்தது. இவற்றின் சந்தை மதிப்பு அப்போதே ரூ.90,000 கோடி. இப்போது மேலும் அதிகரித்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

பத்திரப்பதிவு

பத்திரப்பதிவு

பக்தர்கள் நன்கொடையாக வழங்கும் நிலம், வீடு போன்றவற்றுக்கு 2008 வரை பக்தர்களே பத்திரப்பதிவு கட்டணம் செலுத்தி வந்தனர். 2008 ஆகஸ்ட் மாதம், அப்போதைய ஒருங்கிணைந்த ஆந்திர அரசு, ஆந்திர மாநிலத்தில் தானமாக வழங்கும் நிலம், வீடு, வீட்டுமனை போன்றவற்றுக்கு பக்தர்கள் ரூ.100 மட்டும் பத்திரப்பதிவு கட்டணமாக செலுத்தினால் போதும் என அறிவித்தது.

நிலத்திற்கு பத்திரப்பதிவு

நிலத்திற்கு பத்திரப்பதிவு

2012 ஆகஸ்ட் முதல், சொத்தின் மதிப்பில் சந்தை நிலவரப்படி, 0.5 சதவீதம் பக்தர்கள் பத்திரப்பதிவு கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவித்தது. இப்போது ஆந்திரம், தெலங்கானா பக்தர்களுக்கு மட்டும் இந்த விதி விலக்கு உள்ளது. மற்ற மாநில பக்தர்கள் தங்களது நன்கொடை நிலத்துக்கு அவர்களே பத்திரப்பதிவு கட்டணத்தை முழுமையாக செலுத்த வேண்டி உள்ளது.

ரூ.5 கோடி நிலம் தானம்

ரூ.5 கோடி நிலம் தானம்

சமீபத்தில் சென்னை திருவான்மியூரை சேர்ந்த பெண் பக்தர் ஒருவர் தனக்கு சொந்தமான இடத்தை திருப்பதி தேவஸ்தானத்துக்கு தானமாக வழங்கினார். இதன் சந்தை மதிப்பு ரூ.5 கோடி என கூறப்படுகிறது. ஆனால் அரசு நிர்ணயித்த மதிப்பான ரூ.1.88 கோடிக்கு ரூ.17 லட்சம் பத்திரப்பதிவு கட்டண செலவையும் ஏற்று ஏழுமலையானுக்கு இடத்தை வழங்கினார்.

பத்திரப்பதிவு கட்டணம்

பத்திரப்பதிவு கட்டணம்

இவரைப் போன்று நாடு முழுவதும் ஏராளமான பக்தர்கள் அசையா சொத்துகளை ஏழுமலையானுக்கு நன்கொடையாக வழங்க தயாராக உள்ளனர். ஆனால், பத்திரப்பதிவு கட்டணம் பெருமளவு உயர்ந்து விட்டது.

விதிவிலக்கு தேவை

விதிவிலக்கு தேவை

பத்திரப்பதிவு செலவை திருப்பதி தேவஸ்தானம் ஏற்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லையெனில், ஆந்திர அரசு இதற்கு விதிவிலக்கு அளித்து முழு பத்திரப்பதிவு கட்டணத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

English summary
The Balaji temple in Tirumala, most popularly known as Tirupati Balaji is the richest temple of India in terms of revenues.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X