For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதத்திற்கு அப்பாற்பட்டது யோகா, ஆரோக்கியத்திற்கு நல்லது.. யோகா சொல்லித் தரும் இஸ்லாமியப் பெண்

Google Oneindia Tamil News

போபால்: மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த இஸ்லாயமிப் பெண் ஒருவர் கடந்த ஒரு வருடமாக யோகா சொல்லித் தருகிறார். யோகாசனம் என்பது மதம் சார்ந்தது அல்ல, மதத்திற்கு அப்பாற்பட்டது. இது உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இதை அனைவரும் கற்றுக் கொண்டு பின்பற்ற வேண்டும் என்று அவர் சொல்கிறார்.

47 வயதான அவரது பெயர் சையத் ருபாப் பாத்திமா. யோகாசானத்தை தொடர்ந்து செய்து வருகிறார். தற்போது கடந்த ஒரு வருடமாக மற்றவர்களுக்கும் போதித்து வருகிறார். போபாலில் உள்ள மாநில அரசின் பயிற்சி மையத்தில் இந்த யோகா வகுப்புகள் நடைபெறுகின்றன. பலரும் வந்து ஆர்வமாக இதை கற்றுக் கொள்கின்றனர்.

தற்போது யோகாவை வைத்து எழுந்து வரும் சர்ச்சைகள் குறித்து இவர் கூறியதாவது:

கவனச் சிதறலைத் தடுக்கும்

கவனச் சிதறலைத் தடுக்கும்

யோகாசனம் உண்மையில் எனக்கு நமாஸ் தொழுகையின்போது கவனச் சிதறலைக் குறைத்து, முழு மனதுடன் தொழுகையில் ஈடுபட உதவுகிறது. இது எனது அனுபவம்.

உடலை ஆரோக்கியமாக வைக்கும்

உடலை ஆரோக்கியமாக வைக்கும்

யோகாசனம் என்பது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் உடற்பயிற்சிதான். இதற்கும், மதத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

ஏன் செய்யக் கூடாது

ஏன் செய்யக் கூடாது

இந்துக்கள் இதைச் செய்து உடம்பையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்போது, ஏன் முஸ்லீம்களும் இதைச் செய்யக் கூடாது. அதில் தவறு ஏதும் இல்லை.

மதத்திற்குச் சம்பந்தம் இல்லை

மதத்திற்குச் சம்பந்தம் இல்லை

நான் தினசரி யோகா செய்கிறேன். இப்போது போதிக்கவும் செய்கிறேன். ஆனால் யோகா செய்வதால் எனது மத நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் எதுவும் பாதிக்கப்பட்டதாக நான் கருதவில்லை. யாரும் குறை சொல்லவும் இல்லை.

ஒருமுகப்படுத்த வேண்டும்

ஒருமுகப்படுத்த வேண்டும்

நமாஸின்போது அல்லாவை மட்டுமே மனதில் நினைக்க வேண்டும் என்று குரான் சொல்கிறது. ஆனால் எத்தனை பேர் மனதை ஒருமுகப்படுத்தி நமாஸ் செய்கிறோம். பலருக்கும் கவனச் சிதறல் இருக்கத்தான் செய்கிறது.

கடவுள் மீது மனதைத் திருப்ப

கடவுள் மீது மனதைத் திருப்ப

நான் யோகா செய்யும்போது, எனது ஒருமுக நிலை அதிகரிக்கிறது. அது நான் நமாஸில் ஈடுபடும்போது மனதை கடவுள் மீது முழுமையாக செலுத்தவும் உதவுகிறது.

விரைவில் தனிப் பள்ளி

விரைவில் தனிப் பள்ளி

யோகாவை நான் தற்போது முழுமையாக எடுத்துக் கொண்டுள்ளேன். விரைவில் நானே ஒரு மையத்தைத் தொடங்கவுள்ளேன். அதில் பள்ளிச் சிறார்களுக்கு யோகா சொல்லிக் கொடுக்கத் திட்டமிட்டுள்ளேன். புத்வாராவில் உள்ள எனது மாமியாருக்குச் சொந்தமான பள்ளியில் இந்த மையம் செயல்படும்.

ஓம் கட்டாயம் கிடையாது

ஓம் கட்டாயம் கிடையாது

யோகா செய்யும்போது நீங்கள் கண்டிப்பாக ஓம் சொல்ல வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. ஆனால் ஓம் என்ற சொல்லை சொல்லும்போது உடம்பு முழுவதும் அதிர்வு ஏற்படுவதை உணரலாம். எனவேதான் அதைச் சொல்லச் சொல்கிறார்கள்.

அல்லா என்றும் சொல்லலாம்

அல்லா என்றும் சொல்லலாம்

அதேசமயம்,ஓம் என்று சொல்வது கட்டாயம் அல்ல. அல்லா என்றும் சொல்லலாம். அல்லது அதற்கு இணையான அதிர்வுகளை ஏற்படுத்தக் கூடிய வேறு சொல்லையும் கூட பயன்படுத்தலாம்.

புதிய பெயரைத் தேடுகிறேன்

புதிய பெயரைத் தேடுகிறேன்

அல்லாவுக்கு 99 பெயர்கள் உள்ளன. அதில், ஓம் என்ற ஒலிக்கு இணையான ஒலியுடன் கூடிய பெயரை நான் தேடிக் கொண்டிருக்கிறேன். எனவே ஓம் என்ற வார்த்தைக்குப் பதில் அல்லாவின் பெயரைச் சொல்ல முடியும் என்றார் அவர்.

English summary
A Bhopal based woman Syed Rubab Fatima, 47, does yoga every day and trains others at a government-run training centre in the MP capital for the last one year.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X