குடியரசு தலைவர், பிரதமருடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நாளை சந்திப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில், பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்தை நாளை சந்திக்கிறார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித். தமிழக சட்டசபையில் இன்று ஆளுநர் உரை நிகழ்த்திய நிலையில் நாளை குடியரசு தலைவர், பிரதமருடன் சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நடத்தும் ஆய்வுகளுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் சந்திப்பு நிகழ உள்ளதால், இதுகுறித்தும் ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.

TN Governor to meet Prime Minister Narendra Modi and President Ramnath Govindh

மத்தியில் இருந்து எழுதி கொடுத்ததை போல ஆளுநர் உரை அமைந்திருந்ததாக தமிழக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருந்த நிலையில், ஆளுநர் நாளை டெல்லி செல்ல உள்ளதும் விவாத பொருளாகியுள்ளது.

தமிழகத்தில் நடத்தப்படும் ஆய்வுகள் குறித்தும், தமிழக அரசு நிலை குறித்தும், ஆளுநர், டெல்லியில் குடியரசு தலைவர் மற்றும் பிரதமரிடம் எடுத்துரைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
TN Governor to meet Prime Minister Narendra Modi and President Ramnath Govindh in Delhi on Tomorrow.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற